பில் கேட்ஸ் தாத்தா ஆகப் போகிறாராம்.. செம ஹேப்பி மூடில் உள்ளார்..!

மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் பில் கேட்ஸ் 2023ல் தாத்தா ஆகப் போவதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எனக்கு 67வயதானது. எனக்கு வயதாகிவிட்டது என்று நம்புவது கடினமாக உள்ளது, காரணம் அமெரிக்காவில், என்னுடைய வயதில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் நான் எந்த நேரத்திலும் என்னுடைய வேகத்தைக் குறைக்கத் தயாராக இல்லை என்று பில்கேட்ஸ் தனது 2022 ஆம் ஆண்டு நிறைவு பதிவில் 2023ல் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கியமான விஷயங்களைக் குறித்துத் தனது சொந்த இணையப் பக்கமாகக் கேட்ஸ் நோட்ஸ்-ல் பதிவிட்டு உள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் நான் சமீபத்தில் ஒரு புதிய லென்ஸ் மூலம் உலகைப் பார்க்க துவங்கியுள்ளேன். அடுத்த ஆண்டு நான் தாத்தாவாக மாற உள்ளேன். என் மூத்த மகள் நம்பமுடியாத செய்தி எனக்குக் கொடுத்துள்ளார் எனப் பில்கேட்ஸ் 2022 ஆம் ஆண்டு நிறைவு பதிவில் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் தாத்தா

பில் கேட்ஸ் தாத்தா

"அடுத்த வருடம் நான் தாத்தாவாகிவிடுவேன்" என்று டைம் செய்யும் போதே என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது எனப் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். எனது பேரக்குழந்தை பிறக்கப்போகும் உலகத்தைப் பற்றி நான் நினைக்கும் போது, எல்லாருடைய குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் வாழ்வதற்கும் செழிப்பான ஒரு வாய்ப்பை உருவாக்குவது தற்போது முக்கியப் பொறுப்பாகப் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஜெனிபர் கேட்ஸ்

ஜெனிபர் கேட்ஸ்

பில் கேட்ஸ்-ன் மூத்த மகளான ஜெனிபர் கேட்ஸ் 2021ல் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஜெனிபர்-க்கு சொந்தமான 124 ஏக்கர் குதிரை பண்ணையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நாயல் நாசர் (Nayel Nassar) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

யார் இந்த நாயல் நாசர்

யார் இந்த நாயல் நாசர்

எகிப்து நாட்டு வம்சாவளியை சேர்ந்தவரும், சிகாகோவில் பிறந்து குவைத் நாட்டில் வளர்ந்தார் Nayel Nassar, 31 வயதான நாயல் நாசர் equestrian விளையாட்டில் முன்னணி வீரர் ஆகத் திகழ்கிறார். இருவரும் பல வருடம் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஜெனிபர் கேட்ஸ் கருவுற்று உள்ளார்.

67 வயது

67 வயது

தாத்தா-வாகப் போகும் பில் கேட்ஸ் இந்தப் பதிவில் தனது நன்கொடை திட்டங்கள் குறித்துப் பல முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். 67 வயதிலும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நான் தொடங்கிய திட்டத்தில் முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறேன், எனது பெரும்பாலான சொத்துக்களைச் சமூகத்திற்குத் திருப்பித் தருவது தான் என்னுடைய மிகப்பெரிய மற்றும் முக்கியமான திட்டமாக உள்ளது.

உலகப் பணக்காரர்கள் பட்டியல்

உலகப் பணக்காரர்கள் பட்டியல்

இதனால் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் நான் எந்த இடத்தைப் பிடித்துள்ளேன் என்பதைப் பற்றித் தினமும் கவலைப்படவில்லை. என்னுடைய சொத்துக்களை மொத்தமாகக் கொடுத்து பின்பு தான் இந்தப் பயணத்தில் வெற்றி அடைந்த பின்பு தான் ஓட்டத்தைக் குறைத்துக்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்றத்தாழ்வுகளை

ஏற்றத்தாழ்வுகளை

உலக நாடுகள் முழுவதும் இருக்கும் மோசமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவும் ஒரு வழியாக எனது நன்கொடைகள் எப்போதும் இருக்கும். மேலும் எனது சொத்துக்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காகக் கொடுப்பது என்னுடைய முக்கியப் பொறுப்பாக உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் இனி வரும் காலத்தில் குழந்தை நலனில் அதிகப்படியான நன்கொடை இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+