5 டூ 12.. உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் பில் கேட்ஸ்.. என்ன காரணம்..?

மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், உலகின் சிறந்த பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஏழே நாட்களில் அவர் சுமார் $52 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹4.35 லட்சம் கோடி) சொத்துகளை இழந்துள்ளார். பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 30% இழப்பை சந்தித்துள்ளது. பல பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியதால், அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக ப்ளூம்பர்க் பில்லியனர்ஸ் குறியீடு தெரிவிக்கிறது. அவர் தற்போது $124 பில்லியன் சொத்து மதிப்புடன் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைமை நிர்வாகியும், பில் கேட்ஸின் நெருங்கிய தோழரான ஸ்டீவ் பால்மர், தற்போது $172 பில்லியன் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த மாற்றத்தால், பில் கேட்ஸ் தற்போது உலகின் செல்வந்தர்களை விட பின்னால் இருக்கிறார். ஸ்டீவ் பால்மர் (மைக்ரோசாஃப்டின் முன்னாள் CEO மற்றும் பில் கேட்ஸின் முன்னாள் உதவியாளர்), வாரன் பஃபெட் (பில் கேட்ஸின் நீண்ட நாள் நண்பர் மற்றும் Berkshire Hathaway நிறுவனத்தின் தலைமை நிர்வாகி), லேரி பேஜ் (கூகுளின் இணை நிறுவனர்), லேரி பேஜ் (கூகுளின் இணை நிறுவனர்), பெர்னார்டு ஆர்னால்ட் (LVMH நிறுவனத் தலைவர் (Louis Vuitton, Dior போன்ற பிரபல பிராண்டுகள்), ஜென்சன் ஹுவாங் (Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாகி) ஆகியோரை விட பில் கேட்ஸ் பின்னால் உள்ளார்.

5 டூ 12.. உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் பில் கேட்ஸ்.. என்ன காரணம்..?

உலக பணக்காரர்கள் பட்டியல் : ஜூலை 4, 2025-ன் நிலவரப்படி,
1. எலான் மஸ்க் - $361 பில்லியன்
2. மார்க் சகர்பெர்க் - $254 பில்லியன்
3. லாரி எலிசன் - $253 பில்லியன்
4. ஜெஃப் பெசோஸ் - $244 பில்லியன்
5. ஸ்டீவ் பால்மர் - $172 பில்லியன்
6. லாரி பேஜ் - $163 பில்லியன்
7. பெர்னார்டு ஆர்னால்ட் - $161 பில்லியன்
8. செர்ஜி பிரின் - $152 பில்லியன்
9. வாரன் பஃபெட் - $146 பில்லியன்
10. ஜென்சன் ஹுவாங் - $139 பில்லியன்
11. மைக்கேல் டெல் - $138 பில்லியன்
12. பில் கேட்ஸ் - $124 பில்லியன்

மைக்ரோசாஃப்ட் நிறுவுனரான பில் கேட்ஸின் சொத்து மதிப்பு, சமீபத்தில் திடீரென சுமார் $52 பில்லியன் குறைந்தது. இந்தக் குறைவு அவரது தனிப்பட்ட தொண்டு பங்களிப்புகள் மற்றும் Gates Foundation-க்கு வழங்கிய பெரும் அளவிலான நிதியுதவிகளால் ஏற்பட்டதாகும். Bloomberg Billionaires Index-இல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் தனது மே மாத வலைப்பதிவில் பகிர்ந்திருந்த சொத்து மதிப்பீட்டு விவரங்கள் மற்றும் தொண்டு பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, மதிப்பீட்டு முறையை மாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

பில் கேட்ஸ், கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்த தனது வலைப்பதிவில், தன் சொத்து மதிப்பு $108 பில்லியன் எனக் கூறியிருந்தார். மேலும், இந்த $108 பில்லியன் சொத்துக்களில், பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் முழுமையாகத் தொண்டு நோக்கங்களுக்காக வழங்குவேன் என்று அறிவித்திருந்தார். இந்த பணத்தை Bill & Melinda Gates Foundation என்ற தன்னார்வ நிறுவனத்தின் மூலம் வழங்குவதாக தெரிவித்தார். பில் கேட்ஸ் இந்த தகவலை வெளியிட்ட பிறகு, Bloomberg Billionaires Index நிறுவனம் அவருடைய சொத்து மதிப்பீட்டில் மாற்றம் செய்தது. அதன்படி, பில் கேட்ஸின் முந்தைய சொத்து மதிப்பு $175 பில்லியன் ஆக இருந்தது. ஆனால், தற்போது இது $124 பில்லியனாக குறைந்துள்ளது.

மேலும், 2045 ஆம் ஆண்டுக்குள் Gates Foundation மூலமாக $200 பில்லியனைத் தொண்டு பணிகளுக்காக செலவழிக்கப்படும் என்று பில் கேட்ஸ் கணித்துள்ளார். பில் கேட்ஸ் மற்றும் அவரின் முன்னாள் மனைவியான மெலிண்டா ஃப்ரென்ச் கேட்ஸ், 2024 டிசம்பர் வரை இந்த நிறுவனத்திற்கு $60 பில்லியன் அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தொற்றுநோய்கள் தடுப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர், தனது முன்னாள் மேலாளர் மற்றும் நிறுவன நிறுவனர் பில் கேட்ஸை பொருளாதார ரீதியாக தாண்டி விட்டார். ஆரம்பத்தில், மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் சம்பளமாக நிகர லாபத்தில் பங்காக பெற வேண்டியிருந்தனர். பின்னர், நிறுவனம் இதை மாற்றி, பணியாளர்களுக்கு பங்குகள் (shares) வழங்க ஆரம்பித்தது. பங்குகளின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக, ஸ்டீவ் பால்மருக்கு கொடுக்கப்பட்ட பங்குகள் இப்போது மிகப் பெரிய சொத்தாக மாறி விட்டன. பணியாளர்களுக்கு பங்குகள் கொடுப்பது அவர்களுக்கு பெரும் நன்மை தரக்கூடியதோடு, அவர்கள் பெரிய பணக்காரர்களாக மாற உதவுகிறது. ஸ்டீவ் பால்மர், CEO பதவியில் இருந்த காலமும், பின்னர் பங்குதாரராக இருந்த காலமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியால் தனது சொத்துக்களை பெரிதும் அதிகரித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+