உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 20 வருடமாக ஆட்சி செய்து வரும் பில் கேட்ஸ்-ன் பர்சனல் வாழ்க்கை கொஞ்சம் சோகமானது தான், தனது காதல் மனைவி மெலிண்டா-வை விவாகரத்துச் செய்து 2 வருடங்கள் ஆனா நிலையில் பில் கேட்ஸ் தனது புதிய காதலி உடனான ரொமேண்டிக் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
பில் கேட்ஸ மற்றும் மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் மத்தியிலான விவாகரத்தில் பல சர்ச்சையான விஷயங்கள் வெளியானது மறக்க முடியாது, ஒரு இண்டர்வியூவ்-ல் மெலிண்டா கேட்ஸ் தனது கணவர் குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்து டெக் உலகை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது புதிய காதலியான Paula Hurd உடனான புகைப்படம் வெளியாகியுள்ளது. யார் இந்த Paula Hurd..? பில் கேட்ஸ்-க்கு இவருக்கும் எப்படித் தொடர்பு..? Paula Hurd-ம் டெக் துறையைச் சார்ந்தவரா..?
பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட்
பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் ரிலேஷன்ஷிப்-ல் இருப்பது ஒட்டுமொத்த டெக் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இவரும் டெக் துறையை மறைமுகமாகச் சார்ந்தவர் என்பதால்..
ஆரக்கிள் சிஇஓ
2019 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஆரக்கிள் சிஇஓ-வான மார்க் ஹர்ட்-ன் மனைவி தான் பவுலா ஹர்ட். கடந்த ஒரு வருடமாக 67 வயதான பில் கேட்ஸ் 60 வயதான பவுலா ஹர்ட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார்.
டேட்டிங்
பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் இருவருடைய டேட்டிங் விஷயம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் போது இருவரும் நெருக்கமாக அமர்ந்து மேட்ச் பார்த்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ரிலேஷன்ஷிப்
பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் ரிலேஷன்ஷிப் விஷயத்தை இதுவரை அவர்களின் பிள்ளைகளுக்குக் கொண்டு போகாத காரணத்தால் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தாலும் ரகசியமாக வைத்துள்ளனர். பவுலா ஹர்ட்-ன் கணவர் மார்க் ஹர்ட் 62 வயதில் அக்டோபர் 2019ல் நீண்ட காலம் கேன்சர் நோய் உடன் போராடி மறைந்தார்.
பவுலா ஹர்ட் பணி
இதைத் தொடர்ந்து பவுலா ஹர்ட் ஈவென்ட் பிளானர் ஆகப் பணியாற்றி வந்த நிலையில், நன்கொடையாளராகவும் உள்ளார். மேலும் பவுலா ஹர்ட் டெக் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பவுலா ஹர்ட் மற்றும் மார்க் ஹர்ட்-க்கு கேத்ரின் மற்றும் கெல்லி ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
டென்னிஸ் மீது காதல்
பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரையும் இணைத்தது டென்னிஸ் தான், இருவரும் டென்னிஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். மார்க் ஹர்ட் - பவுலா ஹர்ட் திருமணமாகி இருந்த போதே பல முறை பில் கேட்ஸ் அவரைச் சந்தித்துள்ளார்.
திருமணம்..?
மார்க் ஹர்ட்-ன் மறைவிற்குப் பின்பு டென்னிஸ் மீதான ஆர்வம் இருவரையும் நட்பு வட்டத்தில் இருந்து டேட்டிங், ரிலேஷன்ஷிப் வரையில் கொண்டு வந்துள்ளது. பவுலா ஹர்ட் - பில் கேட்ஸ் இருவரும் திருமணம் செய்துகொள்வார்களா அல்லது ரிலேஷன்ஷிப்-லேயே வாழ்க்கையை நடத்துவார்களா என்பது பெரும் கேள்வி.
பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ்
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் இருவரும் மே 2021ல் தங்களது 30 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள விவாகரத்து செய்தனர். இந்த விவாகரத்துக்குப் பின்பும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பை இருவரும் சேர்ந்து இதுநாள் வரையில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications