அமெரிக்கா பொருளாதார அளவுக்கு நெருங்கி வரும் சீனா தற்போது சர்வதேச சந்தையை காட்டிலும் உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளால் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் சீனா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு பல்வேறு விதிமுறைகளை தளர்த்தியுள்ள காரணத்தால் சீனாவில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் திடீர் பயணமாக சீனா செல்ல உள்ளார், இது மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமை பில் கேட்ஸ் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனங்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் அமெரிக்க அரசு ஏகப்பட்ட தடையை விதித்து வரும் வேளையில் அமெரிக்க நிறுவன தலைவர்களுக்கும், பெரும் பணக்காரர்களும் சீனாவுக்கு செல்ல உள்ளனர்.
கடந்த வாரம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சீனாவுக்கு முக்கிய பயணமாக சென்றார். சீனாவில் எலக்ட்ரிக் கார் வர்த்தகத்தில் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ள டெஸ்லா-வின் சிஇஓ எலான் மஸ்க் இந்த பயணத்தில் முக்கிய அரசு அதிகாரிகளை சந்தித்தார். எலான் மஸ்க் சந்திப்பை தொடர்ந்து சீனா அரசு AI அரசு கொள்கையை வெளியிட்டது.
இதைவிட முக்கியமாக எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் எலான் மஸ்க் சீனா பயணத்தின் போது அமைதியாக இருந்தார். சீனாவில் டிவிட்டர் இயங்காது என்பது ஒருப்பக்கம் இருந்தாலும், இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வது சீனாவில் மிகவும் எளியது. எலான் மஸ்க்-ன் இந்த அமைதியும், பில் கேட்ஸ்-ன் திடீர் பயணமும் பல கேள்விகளை எழுப்பிகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த சில வருடத்தில் ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை சந்திப்பது இதுதான் முதல் முறை. பில் கேட்ஸ் - ஜி ஜின்பிங் கிட்டதட்ட 90 சதவீதம் உறுதியாகியுள்ளது என கூறப்படும் வேளையில் இது தனிப்பட்ட சந்திப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் கிழமை பில் கேட்ஸ் தனது டிவிட்டரில் 2019க்கு பின் சீனாவில் முதல் முறையாக அடையெடுத்து வைக்கிறேன், இந்த பயணத்தில் பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் தொடர்பான சர்வதேச சுகாதார மேம்பாட்டில் பணியாற்று தனது பார்ட்னர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல் பில் கேட்ஸ் - ஜி ஜின்பிங் கடைசியாக 2015ல் Boao forum நிகழ்ச்சியின் போது Hainan மாகாணத்தில் சந்தித்தனர், இதை தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் சீனாவுக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் சுமார் 5 மில்லியன் டாலர் அளவிலான நன்கொடையை வழங்கியது. இதற்கு ஜின் ஜின்பிங் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications