மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், மெலின்டா-வை விவாகரத்து செய்த பின்பு, பவுலா ஹர்டு உடன் காதல் வயப்பட்டு உள்ளதாகவும், விரைவில் நிச்சயம் நடத்தப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி பல கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இது உண்மையா என்பது இதுவரையில் பில் கேட்ஸ் அல்லது பவுலா ஹர்டு உறுதிப்படுத்தாத நிலையில் முக்கியமான செய்தி முக்கியமான நபரிடம் இருந்து வந்துள்ளது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்-ன் பிரதிநிதி அல்லது செய்திதொடர்பாளர் அமெரிக்காவின் பீப்பிள் பத்திரிகைக்கு முக்கிய தகவல்-ஐ பகிர்ந்தார்.

பில் கேட்ஸ், பவுலா ஹர்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக்கொள்ளவில்லை என பல்வேறு வதந்திகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பில் கேட்ஸ் செய்திதொடர்பாளர். பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் பவுலா ஹர்டு நியூயார்க் நகரத்தில் பில் கேட்ஸ் உடன் வெளியே இருக்கும்போது பெரிய வைர மோதிரத்தை அணிந்திருக்கும் போட்டோ வெளியானது.
இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் பில் கேட்ஸ் செய்திதொடர்பாளர் பவுலா ஹர்ட் அணிந்திருந்த மோதிரம் பல தசாப்தங்களாக அவரிடம் உள்ளதை எங்கள் அலுவலகம் உறுதிப்படுத்த முடியும் என்று பில்கேட்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
2019 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஆரக்கிள் சிஇஓ-வான மார்க் ஹர்ட்-ன் மனைவி தான் பவுலா ஹர்ட். பவுலா ஹர்ட்-ன் கணவர் மார்க் ஹர்ட் 62 வயதில் அக்டோபர் 2019ல் நீண்ட காலம் கேன்சர் நோய் உடன் போராடி மறைந்தார்.
மார்க் ஹர்ட் மரணத்தை தொடர்ந்து பவுலா ஹர்ட் சில மாத ஓய்வுக்கு பின்பு ஈவென்ட் பிளானர் ஆகப் பணியாற்றினார். இதற்கையில் பல்வேறு நன்கொடைகளை அளித்தார். மேலும் பவுலா ஹர்ட் டெக் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார், பவுலா ஹர்ட் மற்றும் மார்க் ஹர்ட்-க்கு கேத்ரின் மற்றும் கெல்லி ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரையும் இணைத்தது டென்னிஸ் தான், இருவரும் டென்னிஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். மார்க் ஹர்ட் - பவுலா ஹர்ட் திருமணமாகி இருந்த போதே பல முறை பில் கேட்ஸ் அவரைச் சந்தித்துள்ளார்.
67 வயதான பில் கேட்ஸ் மற்றும் 60 வயதான ஹர்ட் ஆகியோர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒன்றாக இருந்த புகைப்படம் வெளியானது. மார்ச் 2022 இல் நடந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் WTA அரையிறுதிப் போட்டியில் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இதற்கிடையில் மோதிர விஷயம் வெளியாகி இருவரும் காதலிக்கின்றனர், திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர் என்பது போன்ற செய்திகள் வெளியானது.
காதல் எந்த வயதிலும் வரும், ஒருவரின் விருப்பத்தின் படி எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளலாம், எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய சுதந்திரம் அனைத்து மக்களுக்கும் கிடைத்துவிடாது என்றாலும், முற்போக்கான சமுகத்தில் இது சாதாரணமானது, அதிலும் பணக்காரர்கள், பெரும் பதவியில் இருப்பவர்கள் மத்தியில் இது சாதாரணமானது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications