மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகின் முன்னணி தொழிலதிபருமான பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற சர்ச்சைக்குரிய நபருடன் தனக்கிருந்த தொடர்பு காரணமாக கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
செவ்வாயன்று நடைபெற்ற டவுன் ஹால் கூட்டத்தில், எப்ஸ்டீனுடனான தொடர்பு தனது தொண்டு நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், "இது பெரிய தவறு" என்று கூறினார். "நான் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை. தவறாக நடந்ததை எதையும் நான் பார்க்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தார். மேலும் Epstein உடனான தொடர்பு தனது அறக்கட்டளை ஊழியர்களை பாதித்ததற்கு மன்னிப்பு கோரினார்.

எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து பேசிய கேட்ஸ், இரண்டு ரஷ்ய பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், ஆனால் அது எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது அல்ல என்றும் விளக்கினார்.
சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களில் தன்னுடன் சிவப்பு முகமூடி அணிந்த பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் குறித்து பேசிய அவர், அவை எப்ஸ்டீனின் கோரிக்கையின் பேரில் வர்த்தக கூட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டவை என்றும், அந்த பெண்கள் எப்ஸ்டீனின் உதவியாளர்கள் என்றும் தெரிவித்தார். "எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுடனோ அவரைச் சுற்றிய பெண்களுடனோ நான் நேரமும் செலவிடவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
எப்ஸ்டீனுடன் சந்தித்தது "பெரிய தவறு" என்று ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ், "கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிர்வாகிகளை அவருடன் சந்திக்க வைத்தது தவறு" என்று கூறினார். இதில் ஈடுபட்டவர்களிடம் மன்னிப்பு கோரிய அவர், "என்னுடைய தவறால் இதில் சிக்கிய அனைவருக்கும் மன்னிப்பு கோருகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் எப்ஸ்டீன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து ஊழியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த சர்ச்சை கேட்ஸ் ஃபவுண்டேஷனின் நற்பெயரை பாதித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான இது, உலகளவில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. எப்ஸ்டீன் விவகாரம் 2019இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேட்ஸ் இதற்கு முன்பும் தனது தொடர்பு தவறு என்று கூறியிருந்தாலும், இப்போது ஊழியர்களிடம் நேரடியாக மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications