சென்னை: IT தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence - AI) குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படக்கூடிய கருவி என்றும், சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தேவை இதனால் முற்றிலும் குறைந்து விடாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பணி நீக்கங்கள் தொடர்ந்து நடைபெறும் நேரத்தில் இவரது கருத்து சற்று ஆறுதலை அளித்துள்ளது.
ஜிரோதா நிறுவனத்தின் உரிமையாளரான நிகில் காமத் மற்றும் பில்கேட்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் AI மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும், மேலும் தொழில்துறைகளில் AI-இன் செயல்திறன் அருமையாக இருக்கிறது என ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பற்றி பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், AI முக்கியமான இடங்களில் எல்லாம் பயன்படுகிறது. இது கல்வி துறையில் ஆசிரியர்களாக செயல்படக்கூடிய வல்லமை கொண்டது. மேலும் இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸின் உதவியால் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பான செயல்பாட்டினைக் காட்டி வருகின்றன என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.
பில்கேட்ஸிடம், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் வேலைகளைப் பறிக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பில்கேட்ஸ் AI குறித்த அச்சம் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றிய கவலைகள் தேவையற்றவை என்றும், எப்பொழுதும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் தேவை தேவைப்படும். என்னதான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வளர்ந்தாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தேவைப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி விடுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி விட்டால், அது மிகுந்த வளம் கொண்ட நாடாக இருக்கும். முதியவர்கள், ஊனமுற்றோர் என்று அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சமூக அமைப்புகளில் இவை சில விஷயங்களை மாற்றக் கூறும் கூடும் என்று கூறினார்.
அனால், அடுத்த 20 ஆண்டுகளில் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனால், எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது? என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு உரையாடலை பில் கேட்ஸ் முடித்தார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications