மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையை பார்வையிட்டார். சர்தார் வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 182 மீட்டர் உயரமான நினைவுச்சின்னத்தை "நம்பமுடியாத பொறியியல் சாதனை" என்று குறிப்பிட்டார்.
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் மற்றும் அவரது தொண்டு பணிகளுக்காக அறியப்பட்ட பில் கேட்ஸ், குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். இது சர்தார் படேலை கௌரவிப்பதற்கான அற்புதமான தருணம் என்று அவர் கூறினார். சிலையை பார்க்க அழைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சிலை உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் எவ்வாறு உதவுகிறது என்பதையும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார். கேட்ஸின் கருத்துகளுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, பில் கேட்ஸ் தனது வருகையை ரசித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையைக் காண உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்களை அவர் ஊக்குவித்தார்.

பில் கேட்ஸ் தனது பயணத்தின் போது, இந்தியாவின் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை சந்தித்து, இந்தியாவின் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பயன்பாடு, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து விவாதித்தார்.
வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டினார். இது மற்ற வளரும் நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினார்.
பில் கேட்ஸ் மற்றும் பிரதமர் மோடி சமூகத்தின் நலனுக்காக ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உலகை சிறந்த இடமாக மாற்றக்கூடிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
உயர்மட்ட தலைவர்களுடனான தனது சந்திப்புகளுக்கு இடையே, பில் கேட்ஸ் ஒரு டீ விற்பனையாளரான டோலி சாய்வாலாவுடன் ஒரு வீடியோவையும் எடுத்து சமூக தளத்தில் பகிர்ந்தார். இது இணையத்தில் வைரலானது. டோலி சாய்வாலாவிடம் பில் கேட்ஸ் ஒரு கப் டீ கேட்பதை வீடியோ காட்டுகிறது.

டோலியின் தனித்துவமான முறையில் டீயை தயாரிக்கும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பில் கேட்ஸ் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பல முக்கிய தலைவர்களை சந்தித்தார். கலாசார மற்றும் உள்ளூர் நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்களுக்காக அவர் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தார்.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications