இந்தியா ஒரு ஆய்வகம் என பில்கேட்ஸ் கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் அண்மைக்காலமாக தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார். இதனிடையே அவர் ஒரு பாட்காஸ்டில் கலந்து கொண்ட போது இந்தியா ஒரு ஆய்வகம் என கூறி இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Reid Hoffman உடனான் பாட் கேஸ்டில் கலந்து கொண்டு பேசிய பில்கேட்ஸ் இந்தியா புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு ஆய்வகம் என தெரிவித்துள்ளார் .இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் பில்கேட்ஸுக்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்தியா குறித்து ஒரு மோசமான பார்வையை பில்கேட்ஸ் கொண்டிருக்கிறார் என பயனாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் மிக கடினமாக கிடைக்கும் ஒரு நாடு என்றால் இந்தியா தான் அதற்கு சரியான உதாரணம் என அந்த பாட்கேஸ்டில் அவர் கூறியுள்ளார். இந்த துறைகளில் எல்லாம் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறி வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த மூன்று பிரிவுகளில் நாம் மிகப்பெரிய மாற்றத்தை காண முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதற்கான ஒரு ஆய்வகம்தான் இந்தியா என தெரிவித்துள்ள பில்கேட்ஸ் இந்தியாவில் ஒரு விஷயம் முடிகிறது என்றால் உலகின் எந்த பகுதியிலும் அதனை கொண்டு சென்று நாம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு ஆய்வகம் என்ற பேச்சு சமூக வலைத்தளவாசிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர் எங்களைப் போன்ற இந்தியர்கள் உங்களுக்கெல்லாம் கினியா பன்றிகளை போன்றவர்கள் எனக் கூறியுள்ளார். நம்முடைய கல்வி அமைப்பு இவரை ஹீரோ என கொண்டாடுகிறது, ஆனால் இவர் நம்மை பற்றி எப்படி ஒரு பார்வையை வைத்திருக்கிறார் நாம் எப்போது கண்விழிக்க போகிறோம் என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பில்கேட்ஸின் ஆய்வகத்திற்கு தேவையான மனித மாதிரிகள் தான் இந்தியர்கள் என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், இதே பாட்காஸ்டில் அவர் தங்களுடைய மிகப்பெரிய அறக்கட்டளை அலுவலகம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அமைந்துள்ளது என்றும் உலகம் முழுவதும் நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம் அதற்கான கூட்டாளிகள் எல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் .
இந்தியாவிற்கு சென்றாலே உங்களுக்கு ஒரு வைப் கிடைக்கும் என தெரிவித்துள்ள பில்கேட்ஸ் அனைத்து வகையான வருமானம் கொண்டவர்களையும் நம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒற்றுமையாக காண முடிகிறது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கான திட்டங்களுக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications