மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், மனிதர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். விடிந்து எழுந்ததில் இருந்து இரவு படுக்கப்போகும் வரை அடுத்து அடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழாவை சிறப்பிக்கிறார்.
இதனிடையே ஒடிஷா மாநிலத்துக்கு சென்று அங்கு முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறார். பின்னர் புவனேஸ்வரத்தில் உள்ள சேரி பகுதிகளுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.

இந்த நிலையில் பில்கேட்ஸ் ஹாயாக ஒரிடத்தில் உட்கார்ந்து ஒரு சாயா குடிக்கும் விடியோ சமூகதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது.
பில் கேட்ஸுக்கு அந்த சாயாவை சமூக தளங்களில் பிரபலமான டீ வியாபாரி டோலி சாய்வாலா தயாரித்து தந்துள்ளார்.
வியாபாரியின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் டோலி சாய்வாலா என்றால் சமூகத் தளங்களில் மிகப் பிரபலமாக உள்ளது.

தான் டீ குடிக்கும் விடியோவை பில் கேட்ஸே சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார். நாக்பூரின் பேர் போன இந்த டோலி சாய்வாலா, இந்தியாவில் ஒரு டீ தயாரிப்பில் கூட எவ்வளவு மெனக்கெட்டு மக்கள் தினுசு தினுசாக தயாரிக்கின்றனர் என்று போற்றி பாராட்டியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஹேண்டில் மூலம் வீடியோவைப் பகிர்ந்துள்ள கேட்ஸ், "இந்தியாவில், நீங்கள் திரும்பும் எல்லா இடங்களிலும் புதுமைகளைக் காணலாம்-ஒரு எளிய கோப்பை தேநீர் தயாரிப்பதில் கூட!" என்று பதிவிட்டுள்ளார். அத்துடன்
வீடியோவின் தொடக்கத்தில் கேட்ஸ், " தயவுசெய்து ஒரு சாய் [தேநீர்] " என்று அவர் கூறுவதையும் கேட்கலாம்.
டோலி சாயாவாலா ஒரு கப் டீயை தனக்கே உரிய ஸ்டைலில் தயாரித்து பில் கேட்ஸின் கைகளில் கொடுக்கும் வரை அவரை பில் கேட்ஸ் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார்.
தனது பதிவில், "பல சாய் பே சர்ச்சாவை (சாயா பற்றிய விமர்சனங்களை) எதிர்நோக்குகிறோம்," என்று கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாக்பூரின் சதர் பகுதியில் உள்ள பழைய விசிஏ ஸ்டேடியம் அருகே சாலையோர தேநீர் கடையை டோலி சாய்வாலா வைத்துள்ளார்.
முன்னதாக, பில்கேட்ஸ், மாநில அரசு அதிகாரிகளுடன் புவனேஸ்வரில் உள்ள ஒரு குடிசைப்பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடினார்.
கேட்ஸ் மா மங்கள பஸ்தியில் உள்ள பிஜு ஆதர்ஷ் காலனிக்கு சென்று அங்கு குடியிருப்பாளர்களிடம் நலம் விசாரித்தார். அங்கு பணிபுரியும் மகளிர் சுயஉதவி குழுக்களின் உறுப்பினர்களுடனும் அவர் உரையாடினார். இந்தியாவுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உணர்ச்சிப்பூர்வமாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications