சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? அல்லது இப்படியே பறிபோய்விடுமா? எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது.
இன்னும் சில நிறுவனங்கள் சம்பளத்தினை குறைத்தும், சில நிறுவனங்கள் சம்பளம் இல்லா விடுமுறையும் கொடுத்து வருகின்றன.
இந்த காலகட்டத்தில் சம்பள அதிகரிப்பு, போனஸ் என்பதெல்லாம் பலருக்கும் பகல் கனவாவே இருந்து வருகின்றது.
சர்பிரைஸ் கிப்ட்
பில்லியனர் பாஸ் ஒருவர் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமான ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளார். அதுவும் ஒருவர் இருவருக்கு அல்ல, 10,000 ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார் எனலாம்.
அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவினை சேர்ந்த நிதி நிறுவனமான சிட்டாடல் செக்யூரிட்டீஸின் (Citadel Securities) தலைமை நிர்வாக அதிகாரியான கென் கிரிஃபின், நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு விழாவினை, ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இந்த விழாவினை கொண்டாடும் விதமாகவும், 32வது ஆண்டு விழாவினை கொண்டாடியா ஹெட்ஜ் பண்ட் விழாவினையும் கொண்டாட 3 நாள் விருந்து கொடுத்துள்ளார்.
ஊழியர்களை கொண்டாட திட்டம்
தங்களது நிறுவனத்தின் வெற்றிக்காக கடினமான உழைப்பினை கொடுத்த ஊழியர்களை கொண்டாட நினைத்த கிரிஃபின், ஊழியர்களுக்கு மறக்க முடியாத பரிசினையும் கொடுக்க விரும்பினார். உண்மையில் கிரிஃபின் தேர்வு செய்த கிப்டானது பலருக்கும் மறக்க முடியாத அனுபவமாகவே இருந்திருக்கும் எனலாம்.
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு
இன்றைய நெருக்கடியான சவாலான காலகட்டத்தில் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவே முடியாத நிலை தான் இருந்து வருகின்றது. இதனை மனதில் வைத்துக் தான் கிரிஃபின் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் எனலாம்.
பல செலவுகள்
இது குறித்து சிட்டாடல் செய்தி தொடர்பாளர், நியூயார்க், பாரிஸ், சூரிச் மற்றும் பிற நகரங்களில் இருந்து விமான கட்டணங்களையும் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். இது தவிர ஹோட்டல்கள், டிஸ்னி வேர்ல்ட் (Walt disney world ) பூங்களுக்கான கட்டணம் மற்றும் உணவுகளுக்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். இதில் பல வகையான ஆடம்பர உணவுகளும் அடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலை என்ன?
சிட்டாடல் அதிகாரி ஜியா அகமது, நாங்கள் எங்கள் வரலாற்றில் மட்டுமல்ல, நிதி வரலாற்றிலும் மிக அசாதாரமான ஒரு அணியை உருவாக்கியுள்ளோம் என பெருமைபட தங்களது ஊழியர்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
சிட்டாடல் டாக்டிகல் டிரேடிங் 22.4%மும், சிட்டாடல் ஈக்விட்டி ஃபண்டானது 17.8% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications