பில்லியனர் தொழிலதிபர் நிரஞ்சன் ஹிராநந்தானி வெள்ளிக்கிழமை மும்பையில் தனது ஆடம்பரமான கார்களை விட்டுவிட்டு லோக்கல் ரயிலில் பயணம் செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆயிரம் கோடி சொத்து, ரியல் எஸ்டேட் ஜாம்வான் ஏன் லோக்கல் ரயிலில் செல்கிறார் தெரியுமா..?
73 வயதான ஹிரானந்தனி குழுமத்தின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான நிரஞ்சன் ஹிராநந்தானி, மும்பையில் உல்லாஸ்நகருக்கு செல்ல வேண்டி, மோசமான டிராபிக்-ஐ தவிர்க்க லோக்கல் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அவருடைய இந்தப் பணத்தின் நினைவைப் பாதுகாக்க இந்தப் பயணத்தில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் தற்போது நிரஞ்சன் ஹிராநந்தானி பதிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஜூன் மாதம் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனரும் கோயம்புத்தூரைப் பூர்விகமாகக் கொண்டவருமான வேலுமணி தனது காஸ்ட்லியான கார் விடுத்து மும்மையில் பயண நேரத்தை மிச்சப்படுத்த லோக்கல் டிரைனில் பயணித்தார். காரில் 70 நிமிடம், ரயிலில் 18 நிமிடம் என டிவீட் செய்து தான் ரயிலில் சென்ற போட்டோ-வை பகிர்ந்தார்.இது பெரிய அளவில் டிரெண்டான நிலையில் தற்போது நிரஞ்சன் ஹிராநந்தானி இதைப் பாலோ செய்துள்ளார்.

மும்பை டிராப்பிக்கில் நேரத்தை மிச்சப்படுத்தவும், மும்பையின் மோசமான போக்குவரத்தை முறியடிக்கவும் தான் ரயிலில் பயணம் செய்ததாக நிரஞ்சன் ஹிரானந்தானி கூறினார். மேலும் இந்த வீடியோவை இதுவரையில் 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் மற்ற பயணிகளுடன் பிளாட்பாரத்தில் காத்திருந்து மும்பை டூ உல்லாஸ்நகருக்கு ஏசி கோச்சில் ஏறுவது, சக பயணிகள் உடன் பேசுவது, என வீடியோவில் கலக்குகிறார். இது தனது சிறந்த பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகருக்குப் பொதுப் போக்குவரத்து மூலம் அவர் பயணம் செய்தபோது அவரது நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள் சிலரும் சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications