உலகின் மிகப்பெரிய பில்லியனரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தற்போது தனது பட்டியலில் ட்விட்டரையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், சில சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்விட்டரை வாங்குவதில் இருந்து பின் வாங்கினார். ஆனால் ட்விட்டர் நிறுவனமோ நீதிமன்றத்தை நாட, தற்போது ஒரு வழியாக ட்விட்டர் எலான் மஸ்கின் நிறுவனமாகிவிட்டது.
அதிரடி நடவடிக்கை
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய கையோடு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக அதன் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் தொடங்கி பலரையும் பணி நீக்கம் செய்துள்ளார். இன்னும் இந்த பணி நீக்க நடவடிக்கை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால நடவடிக்கை என்ன?
அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், சுதந்திர பேச்சாளர் ஆவார். எனினும் இவர் கையகப்படுத்தியதும் எடுத்த முதல் நடவடிக்கையே பராக் அகர்வால் பணி நீக்கம் தான். இதுவே அவரின் எதிர்கால நடவடிக்கையினை சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. பராக் அகர்வால் மட்டும் அல்ல, தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் தலைமை சட்ட அதிகாரி விஜயா காடே உள்ளிட்டோரையும் பணி நீக்கம் செய்துள்ளார்.
விளம்பரதாரர்களுக்கு சமாதானம்
முன்னதாக போலி கணக்குகளின் எண்ணிக்கையையும் சுட்டிக் காட்டியவர், ட்விட்டர் முதலீட்டாளர்களையும் தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். எனினும் விளம்பரதாரர்களுக்கு ஒரு சமாதான குறிப்பினையும் மறைமுகமாக வெளியிட்டார். ட்விட்டரை அனைவருக்கும் இலவச காட்சியாக மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இது மேற்கொண்டு கடும் நடவடிக்கைகள் வரலாம் என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
தடையை நீக்க திட்டமா?
சமூக ஊடகங்கள் வலது சாரி மற்றும் இடது சாரிகளுக்கு மத்தியில் பிளவுபட்டு நிற்கும் ஆபத்துக்கு மத்தியில், ட்விட்டரை தான் பணத்திற்காக வாங்கவில்லை. அதனை மனித குலத்திற்கு உதவும் விதமாக வாங்கியதாக எலான் மஸ்க் கூறினார்.
மேலும் பயனர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையும் நீக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எதிர்கால திட்டம்
மேலும் பணப் பரிமாற்றம் முதல் ஷாப்பிங் வரையில் அனைத்திற்குமான அடித்தளமாக ட்விட்டரை வாங்கியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எனினும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மோசமான ட்ரோல்கள் மற்றும் மோசமான பதிவுகள் என பலவற்றின் மத்தியில், விளம்பரங்கள் சரிய ஆரம்பித்துள்ளன. மேலும் மதம் சார்ந்த மற்றும் பாலியல் தொடர்பான பதிவுகளுக்கு மத்தியில், பலரும் தங்கள் நேரத்தினை அதில் செலுத்தவும் விரும்புவதில்லை.
விளம்பரங்கள் குறையலாம்
அமெரிக்காவினை தளமாகக் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று, ட்விட்டரில் தனது விளம்பரத்தினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
எனினும் இன்னும் பல நிறுவனங்கள் ட்விட்டரை நம்புவதாக தெரிவித்துள்ளனர். வேறு ஏதேனும் பிரச்சனை நடந்தால் வெளியேறலாமே தவிர, மற்றபடி வெளியேற மாட்டார்கள் என கருத்துகள் நிலவி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை
ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர் மஸ்க்கின் தலைமையின் கீழ் ட்விட்டர், ஐரோப்பிய பிராந்தியத்தின் கட்டுப்பாடுகளுக்கு கீழ் செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் நிறுவனங்கள் தங்களது விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடுமையான அபராதம் விதிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பெரிய சவால்
இது தவிர எலான் மஸ்க்கிற்கு காத்துக் கொண்டுள்ள மற்றொரு சவால், ட்விட்டரில் குவிந்துள்ள போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்களை அகற்றுவதாகும். இதுவே நிறுத்தின் விளம்பர வருவாயினை அதிகரிக்க உதவும் எனலாம். ஆக நிச்சயம் இனி வரவிருக்கும் மாதங்களில் நிச்சயம் புது பொலிவு பெறும் எனலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications