இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் ஹர்ஷ் கோயன்கா இந்தியர்கள் நாள்தோறும் 600 ரூபாயை சேமிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். தற்போது 66 வயதாக கூடிய ஹர்ஷ் கோயன்கா கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் ஆர்பிஜே குழுமத்தின் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.
இந்த ஆர்பிஜே குழுமத்தின் கீழ் கேஇசி இன்டர்நேஷனல், சிஇஏடி டயர்ஸ், ஜென்சார் டெக்னாலஜி என்பன உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளிலும் செயல்பட்டு வரக்கூடிய இந்த குழுமத்தின் தலைவராக ஹர்ஷ் கோயன்கா 1998ஆம் ஆண்டு முதல் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 1434 வது இடத்தில் இருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஹர்ஸ் கோயன்கா சிறிய பழக்கங்கள் நமக்கு பெரிய பலனை வழங்கும் எனக் கூறி ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதன்படி ஒரு நாளைக்கு 600 ரூபாய் சேமித்தால் ஓராண்டுக்கு 2,19,000 ரூபாய் கிடைக்கும்.
அதே போல ஒரு நாளைக்கு ஒரு புத்தகத்தில் 20 பக்கங்களை படித்தால் ஓராண்டில் 30 புத்தகங்களை படித்து முடிக்கலாம், ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடந்தால் ஓராண்டுக்கு 70 மாரத்தான்கள் ஓடியதற்கு சமம். இந்த சிறிய பழக்க வழக்கங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி தரும் என அவர் பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த பதிவு பலரது கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. ஏனெனில் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சேமிக்க வேண்டும் என்ற அவரது பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஒரு சராசரி இந்தியனால் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சேமிக்க முடியுமா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு சுமார் 18 ரூபாய் ஆகும் இந்தியாவில் 90 சதவீத இந்தியர்கள் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பாதிப்பதற்கே கஷ்டப்படும்போது எப்படி 600 ரூபாயை சேமிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவின் பெரும்பணக்காரர் ஒருவர் சராசரி இந்தியர்கள் எப்படி சேமிக்க வேண்டும் என யோசனை தெரிவிப்பது நகையாக இருக்கிறது என சிலர் பின்னூட்டம் செய்துள்ளனர். ஒரு நபர் உங்களைப் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்கள் இதுபோல சேமிப்பதற்காக உங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாயை வழங்குங்கள்....
அதேபோல ஒரு புத்தகத்தின் 20 பக்கங்களை படிப்பதற்கான நேரத்தை வழங்குங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமன் செய்யும் வகையில் ஊழியர்கள் தங்களுடைய உடல் நலன் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் வகையிலும் நேரத்தை வழங்குங்கள் என பதிவிட்டுள்ளார்.ரியாலிட்டியில் இருந்து ஹர்ஷ் கோயன்கா தள்ளி இருப்பதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications