பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ஹிந்துஜா குரூப் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் பல வர்த்தகத்தை வைத்துள்ளனர்.
இந்தப் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தான் கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அசோக் ஹிந்துஜா. ஹிந்துஜா பிரதரஸ் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இக்குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நடந்த வழக்குத் தற்போது முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் ஹிந்துஜா சாம்ராஜ்ஜியம் தற்போது 4 ஆக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. எதற்காக இந்த வழக்கு..? யார் தொடுத்த வழக்கு..? வழக்கு முடிவு பெற்ற என்ன காரணம்..?
ஹிந்துஜா சகோதரர்கள்
ஹிந்துஜா குழுமத்தின் ஹிந்துஜா சகோதரர்களில் கோபிசந்த் மற்றும் ஸ்ரீசந்த் ஆகியோர் லண்டனில் வசிக்கின்றனர். பிரகாஷ் மொனாக்கோவில் இருக்கிறார், அவர்களில் இளையவரான அசோக் மும்பையில் இருக்கிறார். ஹிந்துஜா சகோதரர்களின் மொத்த நிகரச் சொத்து மதிப்பின் 15 பில்லியன் டாலர்களாக உள்ளது.
15 பில்லியன் டாலர் சொத்து
ஃபோர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின் படி, ஹிந்துஜா சகோதரர்கள் 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 110 வது இடத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜூன் 2020 இல் பிரிட்டன் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக ஹிந்துஜா சகோதரர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனை வெளியில் வந்தது.
வழக்கு
ஜூன் 2020 இல் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஹிந்துஜா குழுமத்திற்குப் பெயரில் இருக்கும் ஜெனீவா வங்கியின் உரிமை தொடர்பாக ஸ்ரீசந்த் மற்றும் அவரது மூன்று இளைய சகோதரர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதை விளக்கியது.
இந்துஜா வங்கி
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்துஜா வங்கி 1994 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஸ்ரீசந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 343 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதாவது 2,744 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய வங்கியாகும்.
அசோக் லேலண்ட் பங்குகள்
இந்த வங்கி அதன் உயர் நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் பெயர்போனது. இந்த வங்கி அசோக் லேலண்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. இந்த வங்கியின் உரிமையில் தான் தற்போது பிரச்சனை எழுத்துள்ளது.
2014 ஒப்பந்தம்
அதாவது 2014 ஆம் ஆண்டு ஹிந்துஜா சகோதரர்களான கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அசோக் ஹிந்துஜா ஆகியோர் மத்தியில் இக்குழுமத்தில் இருக்கும் அனைத்து சொத்துக்களும் அனைவருக்கும் பொதுவானது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
உரிமை
இந்த ஒப்பந்தம் படி ஜெனீவா-வில் இருக்கும் இந்துஜா வங்கி 4 சகோதரர்களுக்கும் பொதுவானது. இந்த நிலையில் ஸ்ரீசந்த் ஹிந்துஜா-வின் பிள்ளைகள் இந்த வழக்கில் பல ஆண்டுக் காலமாக 3 சகோதரர்களும் தங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டை முன்வைத்தது.
பல முறைகேடுகள்
இதுமட்டும் அல்லாமல் இத்தனை வருடங்களாக 3 சகோதரர்களும் நிதியைச் சமமாக முதலீடு செய்யாதது முதல் முறைகேடான பணத்தைப் பெற்றது வரையில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அப்படிப் பார்த்தால் 2014ல் ஹிந்துஜா சகோதரர்கள் மத்தியில் செய்யப்பட்ட அனைவருக்கும் அனைத்தும் உரிமை என்ற ஒப்பந்தத்தை மீறியுள்ளனர்.
2014 ஒப்பந்தத்தை ரத்து
இந்த நிலையில் தான் 3 சகோதரர்கள் தரப்பில் 2014 ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூன் மாதம் விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள் மத்தியிலான வழக்கு முடிவுக்கு வந்தது, ஆனால் உண்மையில் இப்போது தான் முக்கியமான பிரச்சனை உள்ளது.
தலைமை உடையும்
2014 ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதால் நிறுவனத்தின் தலைவர் யார் என்பது முதல் யார் யார்க்கு என்ன சொத்துக்கள் என்பது வரையில் பிரச்சனைகள் எழும். ஹிந்துஜா குழுமத்தில் 12க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது, இதில் 6 இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
1,50,000 ஊழியர்கள்
அசோக் லேலண்ட் லிமிடெட், குவாக்கர் கெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட் உட்பட மின்சாரம், மீடியா, ஹெல்த்கேர் என ஹிந்துஜா குழுமத்தில் 1,50,000 ஊழியர்கள் சுமார் 38 நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications