இன்று உலகையே அச்சுறுத்தி வரும் டிரம்ப்-ன் வரி கொள்கை முடிவுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டும் அல்லாமல் அமெரிக்காவையே பாதித்து வருகிறது. டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் சீனா-வை மட்டுமே கட்டம் கட்டி அடித்த காரணத்தால் மற்ற நாடுகளுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் டிரம்ப் தனது ரெசிப்ரோக்கல் வரி மூலம் உலகில் அனைத்து நாடுகளையும் கட்டம் கட்டி அடிக்க துவங்கியிருக்கும் வேளையில், அந்தந்த நாடுகளும் அமெரிக்கா மீது வரியை விதிக்கிறது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரெசிஷன் வரும் என அச்சம் நிலவுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, டிரம்ப் 2வது முறையாக ஆட்சியைப் பிடித்ததைக் கொண்டாடிய பெரும் பணக்காரர்கள் தற்போது பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றிய போது அவருடன் இருந்த 5 பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்து மதிப்பில் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு டிரம்ப் பதிவேயேற்றிய காலத்தில் அதாவது 7 வாரத்திற்கு முன்பு, பங்குச் சந்தையின் வலுவான ஏற்றத்தால் இவர்களுடைய சொத்து மதிப்பு தடாலடியாக உயர்ந்திருந்தது.
டிரம்ப் வந்துவிட்டார் இனி அமெரிக்கா பொருளாதாரம் புதிய வேகத்தில் உயரும் என நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றினர். ஆனால் கடந்த 7 வாரத்தில் அமெரிக்கப் பணக்காரர்களின் நிலை மொத்தமும் மாறியுள்ளது.
Elon Musk: உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கும் எலான் மஸ்க் இந்த 7 வாரத்தில் தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார். எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பில் பெரும் பகுதியாக இருப்பது டெஸ்லா பங்கு மதிப்பு தான். ஆனால் கடந்த 7 வாரத்தில் டிரம்ப் வருகைக்குப் பின்பு பதிவான மொத்த வளர்ச்சியும் மாயமாகி அவரது சொத்து மதிப்பு 148 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது.
எலான் மஸ்க்-ன் கெட்ட நேரமோ என்னவோ, இதேநேரத்தில் ஐரோப்பிய சந்தையில் ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா விற்பனை 70% சரிந்துள்ளது. சீனாவில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 49% குறைந்து. இதுவும் அவருடைய சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் எலான் மஸ்க் வலதுசாரி அரசியல் தலைவருக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்ததும் ஐரோப்பியச் சந்தையில் ஏற்பட்ட விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Jeff Bezos: டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்காவின் அஞ்சல் சேவை மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் உரிமை தொடர்பாக பொது வெளியிலேயே பல முறை வார்த்தை போரில் ஈடுபட்ட ஜெஃப் பெசோஸ், டிரம்ப் 2வது முறையாக வெற்றிபெற்ற பின்பு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தது மட்டும் அல்லாமல் பதவியேற்பு விழாவுக்கு தனது கேர்ள்பிரெண்ட் உடன் சென்று இருந்தார். இதுமட்டுமா, அமேசான் 1 மில்லியன் டாலர் தொகையை Trump's inauguration fund-க்கு நன்கொடையாகக் கொடுத்தார். இதன்மூலம் முதல் ஆட்சியில் இருந்த கசப்பை மும்மையாகத் தீர்த்துக்கொண்டார்.
காசை அளிக்கொடுத்தாலும் ஒரு பயனும் இல்லை என்பது போல் ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஜெப் பெசோஸ் உருவாக்கிய அமேசான் நிறுவனத்தின் பங்கு 14% குறைந்துள்ளது. இது அவருடைய மொத்த சொத்து மதிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
Sergey Brin: கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், டிரம்ப்-ன் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர், ஆனால் நவம்பர் தேர்தலுக்குப் பிறகு மார்-ஏ-லாகோவில் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு கசப்பான நட்பை இனிப்பாக மாற்றினார். இந்த சந்திப்பு டிரம்ப் உடனான பிரச்சனையைத் தீர்த்து வைத்தாலும் கடந்த 7 வாரத்தில் ஆல்பாபெட் பங்கு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை. 2025 ஆம் ஆண்டில் மட்டும் Alphabet Inc பங்கு மதிப்பு 13 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
Mark Zuckerberg: இந்த லிஸ்டில் மிகவும் முக்கியமானவர் பேஸ்புக் உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க், டிரம்ப் பதிவியேற்பு விழாவில் ஜெப் பெசோஸ்-ன் கேர்ள்பிரெண்டான Lauren Sánchez-ஐ அந்த இடத்தை பார்த்து மாட்டிக்கொண்டார். இவருடைய வீடியோ உலகமே பார்த்துக் கலாய்த்துத் தள்ளியது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்ட மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவன பங்குகள், ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை 19% பங்கு மதிப்பு உயர்ந்து இருந்தது. ஆனால், அந்த லாபங்கள் அனைத்தும் தற்போது பூஜ்ஜியமாகியுள்ளது.
Bernard Arnault: டெக் பில்லியனர்களுக்கு தான் இப்படி பிரச்சனை என்று பார்த்தால் பிரெஞ்சு ஆடம்பர பொருட்கள் துறையில் முக்கிய நபராக விளங்கும் பெர்னார்ட் அர்னால்ட்-க்கும் இதே பிரச்சனை தான். டிரம்ப்-ன் நீண்ட கால நண்பராக இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட், அவருடைய 2வது ஆட்சியில் தேர்தல் இரவு முதல் ஜனவரி வரை LVMH பங்கு 20% க்கும் அதிகமாக உயர்ந்தாலும், பின்னர் அந்த லாபத்தில் கணிசமான இழந்துள்ளது.
பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்குப் பிறகு பெர்னார்ட் அர்னால்ட் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். ஆடம்பர சந்தை ஜாம்பவானும் டிரம்ப் வெற்றிக்கு பின்பு தனது சொத்து மதிப்பில் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளார்.
Donald Trump: டிரம்ப் முதல் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் சீனாவுக்கு எதிராக அமைந்திருந்த வேளையில், 2வது ஆட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கே எதிராக அமைந்துள்ளது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதேபோல் டிரம்ப் தனது 2வது ஆட்சியில் எதிர்பார்க்காதது என்னவென்றால் பிற நாடுகள் பதிலடி கொடுப்பது தான்.
சீனா வழக்கமாகப் பதிலுக்குப் பதில் வரியை விதிப்பது வழக்கமாக இருந்தாலும், கனடா, ஐரோப்பிய என பல நாடுகள் தற்போது அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இப்படியிருக்கையில் தான் அமெரிக்க பங்குச்சந்தை தினமும் தரைதட்டுகிறது, சொல்லப்போனால் முதலீட்டாளர்கள் எல்லாம் தற்போது சந்தையில் இருந்து பணத்தை எடுத்து பணமாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
Warren Buffett: இதில் தீர்க்கதரிசி யாரென்றால் வாரன் பபெட் தான், டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற உடனே பலரும் பணத்தை கொண்டு வநது அமெரிக்க பங்குச்சந்தையில் கொட்டினர், ஆனால் அவர் மட்டும் தான் பணத்தை சந்தையிலிருந்து திரும்ப பெற்றார். வாரன் பபெட்-ன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் மட்டுமே தற்போது 300 பில்லியன் டாலர் தொகை பணமாக வைத்துள்ளது. முன்கூட்டியே பல முன்னணி டெக் நிறுவனத்தில் இருந்து தனது பங்கு இருப்பை விற்பனை செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications