இதற்கு முன்னர் பல்வேறு தொழிலதிபர்களும் தங்களுடைய பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த வகையில் பில்கேட்ஸ், மைக்கேல் ப்ளூம்பெர்க், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி போன்ற மில்லியனர்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தன் வாழ்நாள் சொத்தில் பாதிக்கும் மேலாக ஒருவர் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளார். அவர் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் பஃபெட் தான் இத்தகைய உறுதி மொழியை வழங்கியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு $150 மில்லியனுக்கும் அதிகமாகும். இவர் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குகளை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னரே அதிக அளவில் நன்கொடை செய்து வந்த வாரன் பஃபெட் தற்போது தன் குடும்பத்தின் தொண்டு நிறுவனங்களுக்கு $1 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்த நிறுவனத்தை வாரன் பஃபெட்டின் 3 குழந்தைகளான ஹோவர்ட், பீட்டர் மற்றும் சூசி பஃபெட் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு வாரன் பஃபெட் எழுதிய கடிதம் 4 பக்க கடிதத்தில் தனது வாழ்நாள் சொத்து முழுவதையும் தன் மரணத்திற்கு பிறகு எப்படி பிரித்து வழங்க வேண்டும் என்பதை விரிவாக எழுதியுள்ளார். தி சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு 1,500,000 பங்குகளையும், ஷெர்வுட் அறக்கட்டளைக்கு 300,000 பங்குகளையும், ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளைக்கு 300,000 பங்குகளையும், நோவோ அறக்கட்டளைக்கு 300,000 பங்குகளையும் வழங்க இருப்பதாக அறிவித்தார்.
அதோடு வாரன் பஃபெட் தனது செல்வத்தை தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள்ளேயே வைத்திருக்கவும் விரும்பவில்லை. தன் மரணத்திற்கு பிறகு மீதமுள்ள 99.5 சதவீத செல்வத்தை எப்படி பிரித்து எடுத்துக் கொள்வது என்பது குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். தனது 3 குழந்தைகளுக்கும் ஒவ்வொரு அறங்காவலர்களை நியமித்துள்ளார். மரணத்திற்கு பிறகு தன் செல்வத்தை மூன்று பேரும் ஒற்றுமையாக இருந்து மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற விதியையும் வகுத்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக அறிவித்த வாரன் பஃபெட் தற்போது அதை செய்துள்ளார். வாரன் பஃபெட்டின் இந்தத் தொண்டுப் பணிகள், செல்வம் என்பது வெறும் பொருளாதார சேகரிப்பு மட்டுமல்ல, சமுதாய நலனுக்காகவும் அதை பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய கருத்தை நமக்கு உணர்த்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications