பங்குச்சந்தை எல்லாம் மலைஏறிவிட்டது.. இப்போ பெரும் பணக்காரர்களின் டார்கெட் இதுதான்..!

உலகளவில் பணக்காரர்கள் எப்போதும் பெரும்பாலான மக்கள் செல்லும் பாதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாதையில் தான் முதலீடு செய்வார்கள். உதாரணமாக கொரோனா தொற்றுக்குப் பின்பு பங்குச்சந்தையில் கோடிக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் வந்தபோது பல நிறுவனத் தலைவர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்துவிட்டு ரியல் எஸ்டேட், இன்பரா துறையில் முதலீடு செய்தனர்.

கிட்டத்தட்ட இதே மாற்றம் மீண்டும் உருவாகியுள்ளது, இந்தியாவில் பெரும் பகுதி முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையே கதியாக இருக்கும் வேளையில், பெரும் பணக்காரர்கள் தங்களுடைய பணத்தை அதிக வருமானம், லாபம் ஈட்டும் ரியல் எஸ்டேட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

பங்குச்சந்தை எல்லாம் மலைஏறிவிட்டது.. இப்போ பெரும் பணக்காரர்களின் டார்கெட் இதுதான்..!

இந்தியப் பங்குச்சந்தை கடந்த 2 வருடமாக மிகவும் மந்தமான லாபத்தை மட்டுமே கொடுத்த நிலையில் தற்போது பெரும் பணக்காரர்கள் மாற்று முதலீட்டுப் பிரிவைத் தேடிச் செல்ல துவங்கியுள்ளனர்.

உதாரணமாக இந்த ஆண்டு மட்டும் ரியல் எஸ்டேட் மற்றும் இன்பராஸ்ட்ரக்சர் சொத்துக்கள் தொடர்பான 6 பண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 6 பண்டுகள் வாயிலாக மட்டுமே சுமார் 1.25 பில்லியன் டாலர் அளவிலான நிதி திரட்டப்பட்டு உள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்.

கடந்த ஒரு வருடத்தில் பங்குச்சந்தையில் பெரும் லாபம் ஈட்டியவர்கள் அனைவரும் ஏஐ பங்குகள் மற்றும் ஏஐ துறை சார்ந்த பங்குகளில் செய்த முதலீடுகளால் கிடைத்தது. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏஐ மூலம் லாபம் ஈட்டும் வாய்ப்பை முழுமையாகப் பெற முடியாத நிலையில் மாற்று முதலீட்டுத் தளத்தைத் தேர்வு செய்துள்ளதன் விளைவே இந்த 6 பண்டுகளின் வெற்றி.

கடந்த 10 நாட்களாக இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் இருந்தாலும், கடந்த 2 வருடத்தில் நிஃப்டி 50 வெறும் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இதுவே S&P 500 குறியீடு 29 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த மோசமான லாப அளவீட்டில் இருந்து விடுபட இந்திய முதலீட்டாளர்கள் தேர்வு செய்த முதலீட்டுத் திட்டம் AIF எனப்படும் Alternative Investment Funds. மார்ச் 2024 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் இப்பிரிவில் செய்யப்பட்ட முதலீடு கிட்டத்தட்ட 2 மடங்கு உயர்ந்து 64.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

AIF-ல் பெரும் பகுதி முதலீடு குடும்ப அலுவலகம், அசர்ட் மேனேஜர்கள் வாயிலாகவே வருகிறது.

மேலும் Julius Baer மற்றும் EY ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான குடும்ப அலுவலகங்கள் தற்போது 40-45 சதவீதம் வரையிலான தொகையை Alternative Investment Fund-க்கு தான் அதிகம் ஒதுக்கீடு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. AIF-ல் பிரைவேட் கிரெடிட்-ல் துவங்கி REIT, Infra Invit ஆகியவையும் அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+