உலகளாவிய செல்வத்தில் நிகழ்ந்த கடுமையான வீழ்ச்சிகளில் ஒன்றாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி "விடுதலை நாள்" அறிவிப்பில் பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகின் 500 பணக்காரர்கள் ஒரு நாளிலேயே மொத்தமாக 208 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்தனர் என்று ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.
உலக சந்தைகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய டிரம்பின் இந்த நடவடிக்கையால், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு, அதன் வரலாற்றில் நான்காவது மிகப்பெரிய ஒரே நாளின் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கொரோனா பெருந்தொற்று காலத்திலுள்ள உச்ச நிலைக்குப் பின் நடந்த மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்த வீழ்ச்சியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பில்லியனர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், டெஸ்லா தலைவரான எலோன் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உலகச் சாம்ராஜ்யங்களை நடத்தும் முன்னணி பணக்காரர்களே அதிக சொத்துகள் இழப்பைச் சந்தித்தனர். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவர்களின் பங்குகள் 9 சதவீதம் சரிந்தன, இது ஏப்ரல் 2022க்குப் பிறகு அமேசான் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். இந்த வீழ்ச்சியால், அவர் தனது தனிப்பட்ட சொத்துக்களில் 15.9 பில்லியன் டாலரை இழந்தார்.
அதே நேரத்தில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகராகப் பணியாற்றும் எலோன் மஸ்க்கின், டெஸ்லா பங்குகள் 5.5 சதவீதம் வீழ்ந்ததால், 11 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்தார். இவர்கள் இருவரும் இந்த வரிசையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தவர்களில் முன்னணியில் உள்ளனர், மேலும் இது வரிகள் விதிப்பதற்கான டிரம்பின் அறிவிப்பு மற்றும் அதன் பிந்தைய சந்தை பதட்டத்தின் நேரடி விளைவாகும்.
இதேபோல், அமெரிக்காவை சேர்ந்த மற்ற சில பில்லியனர்களும் இந்த சந்தை வீழ்ச்சியால் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். ப்ளூம்பெர்க்கின் வெளியிட்ட அறிக்கையின் படி, மைகேல் டெல் 9.53 பில்லியன் டாலர், Oracle நிறுவனர் லாரி எலிசன் 8.1 பில்லியன் டாலர், NVIDIA சிஇஓ ஜென்சன் ஹுவாங் 7.36 பில்லியன் டாலர், Google இணை நிறுவனர் லாரி பேஜ் 4.79 பில்லியன் டாலர், Google இணை நிறுவனர் செர்ஜி ப்ரின் 4.46 பில்லியன் டாலர், Interactive Brokers நிறுவனர் தாமஸ் பீட்டர்ஃபை 4.06 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்தனர். இந்த வரிசையில் பலர் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதனால், டிரம்பின் வரி போர் அறிவிப்பால் அந்த துறைமே கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வரிசையில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தவர்கள் பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் ஆவர். அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் 9 சதவீதம் குறைந்தது, இது மிகவும் அபூர்வமான வீழ்ச்சி என குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக, அவர் மொத்தமாக 17.9 பில்லியன் டாலர் சொத்தை இழந்தார், மற்றும் இது அவருடைய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரே நாளில் நடந்த இழப்பாகும்.
டிரம்பின் வரி அறிவிப்பு காரணமாக, அமெரிக்காவுக்கு வெளியிலும் பல பணக்காரர்கள் தவிர்க்க முடியாத பாதிப்புகளை சந்தித்தனர். சீன காலணி தயாரிப்பு நிறுவனமான Huali Industrial Group Co. நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் காங்யுவான், ஒரே நாளில் 1.2 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தார். இது 13% தனிநபர் சொத்தின் வீழ்ச்சி ஆகும். இதேபோல், LVMH (Louis Vuitton, Moet & Hennessy) குழுமத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட், 6 பில்லியன் டாலரை இழந்தார். கனடாவைச் சேர்ந்த Shopify நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டோபி லூட்கே, 1.5 பில்லியன் டாலர், அதாவது 17% சொத்துகளை இழந்தார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications