இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், ரீடைல் துறையின் மீது நீண்ட காலமாக கண் வைத்திருந்த அதானி தற்போது அதற்காக மெகா மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
அதானி குழுமம் தற்போது ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறைகளில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், கூகுள் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி குழுமம் களத்தில் இறங்குகிறது.

அதானி குழுமம் ஒரு டிஜிட்டல் நிறுவனத்தை உருவாக்கவும், அதன் மூலம் மக்களிடம் நேரடியாக வர்த்தகம் செய்யவும் திட்டமிட்டு வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் டிஜிட்டல் திட்டங்கள் என்ன?
யு.பி.ஐ (UPI) லைசென்ஸ்: இந்தியாவில் பெரு நகரங்கள் முதல் சிறிய கிராமம் வரையில் தற்போது UPI பரவலாகப் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்டது டிஜிட்டல் கட்டண முறைமையான UPI. இந்த துறையில் தற்போது கூகுள், போன்பே ஆதிக்கம் செலுத்தினாலும், பல சிறிய நிறுவனங்கள் இதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களை பெற போராடி வருகிறது. இந்த நிலையில் யூபிஐ சேவையில் இறங்க லைசென்ஸ் பெற அதானி குழுமம் முயற்சித்து வருகிறது.
கோ பிரான்டெட் அதானி கிரெடிட் கார்டு: பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, அதானி பெயரில் கோ பிரான்டெட் கிரெடிட் கார்டை வெளியிட அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஓஎன்டிசி (ONDC) வழியாக ஆன்லைன் ஷாப்பிங்: இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (Open Network for Digital Commerce - ONDC) என்ற தளம் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் சேவையை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஓஎன்டிசி தளம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொது ஈகாமர்ஸ் நெட்வொர்க் ஆகும்.
அதானி ஒன் ஆப் (Adani One App): இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மேற்கண்ட சேவைகள் அனைத்தும் "அதானி ஒன்" என்ற ஆப் மூலம் மக்களுக்கு வழங்கப்படும். 2022 ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆப், தற்போது ஹோட்டல் முன்பதிவு, விமான டிக்கெட் முன்பதிவு போன்ற பயண சேவைகளை வழங்கி வருகிறது. இதன் நீட்சியாக யூபிஐ, கிரெடிட் கார்டு, ONDC சேவைகள் ஆகியவை இருக்கும்.
அதானி குழுமத்தின் வாடிக்கையாளர்கள் யார்?: அதானி விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகள், மின்சாரம் மற்றும் எரிவாயு சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் என பல தரப்பு வாடிக்கையாளர்கள் இதில் அடங்குவர் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இன்றைய போட்டி மிகுந்த டிஜிட்டல் சேவை சந்தையில் வெல்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். உதாரணமாக Adani One App இதுவரையில் டவுன்லோடு செய்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகம் எனக் கூகுள் ப்ளே ஸ்டோர் தரவுகள் காட்டுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications