உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான பைனன்ஸ் நிறுவனம் மொத்தமாக 4.3 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் Binance நிறுவனத்தின் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Binance தலைமை நிர்வாகி Changpeng Zhao அமெரிக்க பணமோசடி தடுப்பு விதிகளை மீறியனார் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இது நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தனது பதவியை விட்டு விலகியுள்ளார். மேலும் நிறுவனத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் அமெரிக்க அதிகாரிகளுடனான ஒப்பந்தத்திலும் Changpeng Zhao கையெழுத்திட்டு உள்ளார்.

ஹமாஸ், அல் கொய்தா மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு உட்பட, அமெரிக்காவால் பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் 100,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து Binance அமெரிக்க அரசிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இது அமெரிக்க பணமோசடி எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைச் சட்டங்கள் கீழ் பெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
FTX நிறுவனத்தை உருவாக்கிய சாம் பேங்க்மேன் ஃப்ரைட் வீழ்ச்சியை தொடர்ந்து Binance தலைமை நிர்வாகி Changpeng Zhao பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் படி Changpeng Zhao 50 மில்லியன் டாலர் தொகையை சொந்த பணத்தில் இருந்து அபராதமாக செலுத்த உள்ளார்.
பைனன்ஸ் சிஇஓ Changpeng Zhao, டிவிட்டரில் இன்று நான் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறேன், நான் தவறு செய்துள்ளேன், அதை ஏற்றக்கொண்டு சரியான விஷயத்தை செய்ய வேண்டும். சிஇஓ பதவியை விட்டு விலகுவது சாதாரண விஷயமில்லை, ஆனால் இது தான் பைனன்ஸ், முதலீட்டாளர், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் சமுகத்திற்கும் சரியானதாக இருக்கும் என தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான பைனன்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓஜ-வாக பிராந்திய சந்தை வர்த்தக பிரிவின் தலைவரான ரிச்சர்ட் டெக் நியமிக்கப்ட்டு உள்ளார். ரிச்சர்ட் டெக் பைனன்ஸ் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு அபுதாபி குளோபல் மார்கெட் அமைப்பின் சிஇஓ ஆகவும், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் அமைப்பின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரியாக இருந்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications