கிரிப்டோகரன்சி உலகின் மிகப்பெரிய டிரேடிங் தளமான பினான்ஸ் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி "CZ" என்று அழைக்கப்படும் சாங்பெங் ஜாவோவிற்கு, அமெரிக்க பண மோசடி தடுப்பு சட்டங்களை மீறிய குற்றத்திற்காக செவ்வாய்க்கிழமை அன்று நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த முக்கிய தீர்ப்பு சியாட்டில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் முதலில் மூன்று வருட தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார், ஆனால் சியாட்டில் நீதிமன்றம் வெறும் 4 மாதம் என்ற மிகக் குறைவான சிறைத் தண்டனையை அளித்து உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அமெரிக்கா கார்ப்பரேட் உலகில் இது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

கிரிப்டோகரன்சி உலகில் முன்னணி நபராக மட்டும் அல்லாமல் இத்துறையின் பெரும் பணக்காரராக இருந்த சாங்பெங் ஜாவோ, தற்போது சிறை தண்டனை பெறும் இரண்டாவது முக்கிய கிரிப்டோ தலைவர் ஆவார்.
இதற்கு முன்பு 8 பில்லியன் டாலர் மதிப்பிலான மோசடி வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் FTX கிரிப்டோ நிறுவனத் தலைவர் சாம் பேங்க்மான்-ஃப்ரைடு. இவரின் தண்டனையை ஒப்பிடும்போது பினான்ஸ் சாங்பெங் ஜாவோ தண்டனை மிகக் குறைவானது.
அமெரிக்க நிதித்துறை விதிமுறைகளைப் பின்பற்றுவதை விடத் தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதிலும், வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தியதற்காக நீதிபதி சாங்பெங் ஜாவோவை கடுமையாக விமர்சித்தார். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை இருந்த காரணத்தால் நீதிமன்றம் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது சாங்பெங் ஜாவோ எவ்விதமான அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
சாங்பெங் ஜாவோ தலைமையில் இயங்கி வரும் பினான்ஸ் உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆகும். இந்த கிரிப்டோ வர்த்தக தளத்தில் ஹமாஸ், அல் கொய்தா மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு உட்பட, அமெரிக்காவால் பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் 100,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து Binance அமெரிக்க அரசிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளது.
இது அமெரிக்க பணமோசடி எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைச் சட்டங்கள் கீழ் பெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தனது சிஇஓ பதவியை விட்டு விலகினார் சாங்பெங் ஜாவோ.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்பு சாங்பெங் ஜாவோ-வுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அரசு வழக்கறிஞர் டெஸா கோர்மன் இந்த தீர்ப்பை ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கொண்டாடிய அதே வேளையில், விமர்சகர்கள் இந்த தண்டனை மிகவும் மிதமானது என்று வாதிட்டனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications