சுயதொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் தயாரிப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெற்று விட முடியும் என நூடுல்ஸ் கிங் என அறியப்படும் பினோத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டு, நேபாளத்திற்கு சென்று மிகப்பெரிய ஒரு நூடுல்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் பினோத் சவுத்ரி . அவருடைய தாத்தா காலத்திலேயே ராஜஸ்தானிலிருந்து அவருடைய குடும்பம் நேபாளத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாம். சவுத்ரியின் தாத்தா ஆடை சம்பந்தப்பட்ட தொழிலை நடத்தி வந்தார்.

இந்தியாவிலிருந்து ஆடைகளை வாங்கிச் சென்று நேபாளத்தில் விற்பனை செய்வதுதான் இவருடைய வேலை. இதனை அடுத்து பினோத்தின் தந்தையும் இதே தொழிலில் ஈடுபட்டார். இந்தியாவிலிருந்து துணிகளை வாங்கிக்கொண்டு பல மைல் தூரம் நடந்து சென்றே நேபாளத்திற்கு சென்று இவர்கள் விற்பனை செய்வார்களாம்.
தந்தையும் தாத்தாவும் எப்படி தொழில் செய்கிறார்கள் என்பதை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவர் தான் பினோத் . அப்போது ஒருமுறை இவருடைய தந்தையிடம் தொழில் தொடங்குவது குறித்து பேசிய போது அவர் ஒரு வேலையை கற்க வேண்டுமெனில் ஒரு இடத்தில் அமர்ந்து அந்த வேலை எப்படி செய்யப்படுகிறது என பார்க்க கூடாது, நீயே களத்தில் இறங்கி செய்ய வேண்டும் என கூறினாராம். பினோத் இதனையே ஒரு தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு நேபாளத்தில் இல்லாத ஒரு தொழிலை புதிதாகக் கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்.
ஒருமுறை தங்களுடைய ஆடை சம்பந்தப்பட்ட தொழிலுக்காக தாய்லாந்திற்கு சென்ற போது தான் அங்கே கிடைக்கும் நூடுல்ஸின் சுவை இவரை ஈர்த்துள்ளது. இந்த நூடுல்ஸை நாம் ஏன் நேபாளத்தில் அறிமுகம் செய்யக்கூடாது என முடிவுக்கு வந்தார். தாய்லாந்தில் இந்த நூடுல்ஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு நேபாளத்தில் Wai Wai நூடுல்ஸ் என்ற பிராண்டை அறிமுகம் செய்தார்.
உடனடியாக நேபாளம் மட்டும் இன்றி அண்டை நாடுகளில் எல்லாம் மக்களுக்கு பிடித்த ஒரு நூடுல்ஸ் பிராண்டாக இது மாறியது. ஏற்கனவே தந்தை மற்றும் தாத்தாவுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதால் இவருக்கு இதனை எப்படி சந்தை படுத்த வேண்டும் ,சாதாரண மக்களின் கைகளுக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற நுணுக்கங்கள் தெரிந்தன.
நேபாளம் இந்தியா மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய நூடுல்ஸுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. நாம் தயாரிக்க கூடிய ஒரு பொருள் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தால் அது எளிதாக அவர்களை சென்றடைந்த விடும் என்ற ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் தொழிலை மேற்கொண்டதாக கூறுகிறார்.
நூடுல்ஸ் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பக்கூடிய ஒரு உணவாக மாறிவிட்டது ,எளிதாக சமைக்கலாம் என்ற அந்த வசதி தான் இது எளிதாக மக்களிடம் சென்று சேர்வதற்கும் காரணமாக இருக்கிறது. இப்படி மக்களின் வேலைகளை எளிமைப்படுத்தக்கூடிய , நேரத்தை மிச்சப்படுத்த கூடிய ஒரு பொருளை உருவாக்கும் யாரும் தொழிலில் வெற்றி பெற முடியும் என கூறுகிறார் . இதன் மூலம் நேபாளத்தின் முதல் பில்லினியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
பினோத் சவுத்ரியின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு குழுவாக இணைந்து நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும், ஒரு நிறுவன உரிமையாளர் என்றால் வெறுமனே மற்றவர்களை வேலை வாங்குவது மட்டுமல்ல அந்த வேலையின் நம்முடைய பங்களிப்பும் பெருமளவில் இருக்க வேண்டும் என்ற தன்னுடைய தந்தையின் அறிவுரையே இந்த நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருக்கிறது என கூறியுள்ளார்.இவர் தன்னுடைய சுயசரிதையை Making It Big என்ற பெயரில் ஒரு புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications