இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற போது இருவரும் நடனமாடியுள்ளனர்.
இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அரசியல்வாதியும் தொழில் முனைவோருமான அனில் ஷெட்டி, சுதாமூர்த்தி மற்றும் கிரன் மசூம்தர் ஷா ஆகிய இருவரோடும் நடனமாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னுடைய நடனத்தை கைவிடுங்கள் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்கள் எவ்வளவு எனர்ஜியோடு நடனம் ஆடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவில் இருவரும் இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனம் ஆடுகின்றனர், சுற்றி இருப்பவர்கள் அவர்களை ஆரவார படுத்துகின்றனர் . இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் . இவர் ராஜசபா எம்பி ஆகவும் இருக்கிறார் இவர் எழுதிய புத்தகங்களும் இவருடைய ஊக்கம் தரும் பேச்சுகளும் தற்கால இளைஞர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றவை.
கிரண் மசூம்தர் ஷாவின் சகோதரரின் மகனான எரிக் மசூம்தர் அமெரிக்காவில் கணினி மற்றும் கணிதம் சம்பந்தப்பட்ட அறிவியல் பாடப் பிரிவில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். இவருடைய திருமண வரவேற்பு நிகழ்வு தான் பெங்களூரின் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு உயர் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர் . குறிப்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் இதில் கலந்து கொண்டார்.
எரிக் மசூம்தர் ஷா பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். பொறியியல் , மெஷின் லேர்னிங் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்து வருகிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications