இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கும் பல்வேறு சேவைகளுக்கும் முக்கிய ஒரு அடையாள ஆவணமாக நாம் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம் . ஐந்து வயது வரை உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டையும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழக்கமான ஆதார் அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் அட்டை பொறுத்தவரை அவர்களின் பயோமெட்ரிக் தரவுகள் அதில் இருக்காது. குழந்தைகளுக்கு ஐந்து வயது முடிந்த பிறகு தான் அவர்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்யவே முடியும். இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டைகளில் பயோமெட்ரிக் தரவுகள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பதாக யுஐடிஏஐ தகவல் தெரிவிக்கிறது .

பெற்றோர் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தரவுகளை அப்டேட் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் ஆதார் அட்டை செயலிழக்க நேரிடும் என யுஐடிஏஐ எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதற்காக பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் முகாம்களை நடத்தவும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இந்த சூழலில் குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் சேவைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூல் செய்யப்படாது என யுஏடிஏஐ அறிவித்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருவதாகவும் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் கூறுகிறது. இதன் மூலம் சுமார் 6 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

குழந்தைகள் ஐந்து வயது முடிந்த பிறகும் , 15 வயது முடிந்த பிறகும் என இரண்டு முறை அவர்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி , புகைப்படம் ஆகிய மூன்றையும் கொண்டு ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயம். அதை செய்ய தவறினால் குழந்தைகளுக்கு எந்த ஒரு அரசின் நல திட்டங்களும் கிடைக்காது . ஆதார் அட்டையே செயலிழந்து விடும் என யுஐடிஏஐ அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தரவுகள் அப்டேட் செய்யப்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில் அடுத்த ஓராண்டு காலத்திற்கு இதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . அதாவது 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை இனி இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம்.
பள்ளிகளில் அட்மிஷன் போடுவது, போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்வது , ஸ்காலர்ஷிபர்களுக்கு பதிவு செய்வது ஆகியவற்றுக்கு அப்டேட் செய்யப்பட்ட ஆதார்தான் கட்டாயமாக கேட்கப்படுகிறது. இதற்கு 125 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என இருந்த நிலையில் அடுத்த ஓராண்டுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications