பீர் உற்பத்தி நிறுவனமான B9 பெவரேஜஸ் ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் கொடிக்கட்டி பறந்தது, ஆனால் சில நிர்வாக முடிவுகள் மற்றும் வர்த்தக பாதிப்புகள் இந்நிறுவனத்தை கடன் நெருக்கடியில் தள்ளி தற்போது நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்று ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை சம்பளத்தை கொடுக்க போராடி வருகிறது.
இந்த சொத்தை விற்பனை செய்து கிடைக்கும தொகையை வைத்து ஊழியர்களுக்கான ஊதியம் அளிக்கவும், அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) நிலுவைதொகையை செலுத்தவும் உதவும் என இந்நிறுவனத்தின் தலைவர் அங்குர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அங்குர் ஜெயின், "முக்கிய சொத்தை விற்பனை செய்து ஊழியர்களுக்கான நிலுவை சம்பளத்தையும், பிஎப் பணத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது குறித்து, இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நேற்று திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவான ஒப்புதல் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் நிதி நெருக்கடி
B9 பெவரேஜஸ் 2024 நிதியாண்டில் ரூ.748 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.638 கோடியை விட அதிகம். விற்பனை அளவு 6-7 மில்லியன் கேஸ் வரை குறைந்தது. இந்நிறுவனத்தின் பீர் உற்பத்தி ஜூலை மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான், இந்நிறுவனத்தின் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் ஊதியம், PF, TDS நிலுவை குறித்து கடந்த மாதம் அங்குர் ஜெயின்-க்கும் மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பினர்.
இதை தொடர்ந்து அங்குர் ஜெயின் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்து, இதன் மூலம் கிடைக்கும் நிதியை உடனடி நிறுவனத்திற்குள் உட்செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். இது ஊழியர் ஊதியம், PF நிலுவை தொகையை தீர்க்க உதவும். ஆனாவ் எந்த சொத்துக்களை விற்கப்போகிறார் என்ற விபரங்களை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications