இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள இதேவேளையில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உற்பத்தியும் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து, ஏற்றுமதியும் பிக்கப் ஆகியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் இந்திய சந்தையில் லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிப்பு மற்றும் விற்பனையில் பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது.
முதலில் யார் உற்பத்தியை மேம்படுத்தி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்கிறார்களோ அவர்களுக்கு தான் ஜாக்பாட் என கணக்கில் இந்திய சந்தை இயங்கும் காரணத்தால் இத்துறையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் பெல்ஜியத்தின் சாம்ப்ரேவில் என்னும் பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமான நானோசில் SA என்ற நிறுவனத்தை பிர்லா கார்பன் கைப்பற்றும் பணிகளை முழுமையாக முடித்துள்ளது. நானோசில் SA நிறுவனம் மல்டி வால் கார்பன் நானோடியூப் (MWCNT's) உற்பத்தி செய்து வருகிறது.
பிர்லா கார்பன், பெல்ஜியம் நாட்டின் நானோசில் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் தனது எனர்ஜி சிஸ்டம்ஸ் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளது. மேலும் இந்த மல்டி வால் கார்பன் நானோடியூப் மெட்டிரியல் தான லித்தியம்-அயன் பேட்டரி செயல்திறனுக்கு முக்கியமான பொருளாகும். இந்த மல்டி வால் கார்பன் நானோடியூப் பல துறையில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
பிர்லா கார்பன் - நானோசில் கூட்டணி வளர்ந்து வரும் எனர்ஜி சிஸ்டம் பிரிவில் பிர்லா குழுமம் முக்கிய இடத்தை அடையும் என பிர்லா குழுமத்தின் கெமிக்கல் பிரிவின் தலைவரும், பிர்லா கார்பன் நிறுவன தலைவருமான டாக்டர் சந்துருப் மிஸ்ரா தெரிவித்தார்.
பிர்லா கார்பன் உலகளவில் உயர்தர கார்பன் பிளாக் சேர்க்கைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களில் ஒன்றாகும், மேலும் 60 பில்லியன் டாலர் ஆதித்ய பிர்லா குழுமத்தின் முதன்மையான வர்த்தக பிரிவாகவும். கார்பன் பிளாக் என்பது பிளாஸ்ட் பொருட்களின் தரத்தையும் உறுதி தன்மையை மேம்படுத்தும் ஒரு சேர்ப்பு.


Click it and Unblock the Notifications