பங்கு சந்தையில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், கிரிக்கெட், குறிப்பாக IPL (Indian Premier League) மிகவும் உறுதியான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. ஐபிஎல் அணிகளின் மதிப்பீடு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தால் "குறைந்த அபாயம் + அதிக லாபம் + வேகமான மதிப்பு" கொண்ட மாற்று சொத்து வகையாக (Alternative Asset Class) பெரும் பணக்காரர்களுக்கு மாறியுள்ளது.
இதனால் ஐபிஎல் அணிகளின் மதிப்பீடு எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த அணிகளின் உரிமையை போட்டிப்போட்டு வாங்கி வருகின்றனர். இன்று ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமை கைமாறியுள்ளது.

அம்பானி முதல் டாடா வரை
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள்-அம்பானி, டாடா, அதானி நேரடியாகவும் மறைமுகமாக முக்கிய முதலீடுகளை செய்து வந்த நிலையில் இதில் பிர்லா குரூப் மட்டும் நீண்ட காலமாக பங்கேற்காமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது பிர்லா குழுமம் தலைமையில் ஆர்சிபி அணி கைப்பற்றப்பட்டு உள்ளது.
பிர்லா குடும்பம்
ஆதித்யா பிர்லா குரூப் தலைமையிலான கூட்டமைப்பு, 1.78 பில்லியன் டாலர் மதிப்பில் Royal Challengers Bengaluru (RCB) அணியை கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் விளையாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும்.
ஆர்சிபி அணியை ஆதித்யா பிர்லா குரூப் தனியாக வாங்கவில்லை, 4 நிறுவனங்களாக இணைந்த கூட்டமைப்பில் வாங்கியுள்ளது. இக்கூட்டமைப்பில் Aditya Birla Group, Times Group, Bolt Ventures, Blackstone ஆகியவை இணைந்து வாங்கியுள்ளது.
இந்த அணியின் புதிய தலைவராக குமார் மங்கலம் பிர்லா-வின் மகனான ஆர்யமன் விக்ரம் பிர்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம், இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் உரிமையில் அதிக பங்கு பெறும் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் பணக்காராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2008-ல் 111.9 மில்லியன் டாலருக்கு Mumbai Indians அணியை வாங்கியது. இந்த அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றதுடன், அதிக மதிப்பீடு பெற்ற மிக உயர்ந்த மதிப்புடைய அணியாகும்.
மேலும், MI Cape Town (SA20), MI Emirates (ILT20), MI New York (MLC) போன்ற அணிகள் மூலம் அம்பானி குடும்பம் உலகளாவிய கிரிக்கெட் முதலீட்டில் விரிவடைந்துள்ளது. நீதா அம்பானி அணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான Indiawin Sports கீழ் இந்த அணிகள் உள்ளது.
டாடா குழுமம்
Tata Group, 2024-2028 காலத்திற்கு ₹2,500 கோடி மதிப்பில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது.
ஒரு ஆண்டுக்கு ₹500 கோடி செலவில் "TATA IPL" என பிராண்டிங் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், டாடாவின் பல பிராண்டுகளை (Tata Motors, Titan, Voltas, Tata Neu) ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய மார்க்கெட்டிங் தளமாக ஐபிஎல் நிறுவனத்திற்கு உள்ளது.
அதானி குழுமம்
Adani Group-யிடம் தற்போதைக்கு IPL அணி இல்லை. ஆனால் 2021-இல் புதிய அணிக்கான போட்டியில் பங்கேற்றதுடன், 2024-இல் Gujarat Titans அணியில் பங்கு வாங்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், Adani Sportsline மூலம், WPL-ல் Gujarat Giants,UAE-யில் Gulf Giants (ILT20), Pro Kabaddi மற்றும் Ultimate Kho Kho ஆகிய அணிகளை வைத்துள்ளது.
IPL 2026
2026-ஆம் ஆண்டு ஐபிஎல் (19வது சீசன்) மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 அன்று நிறைவடைகிறது. தொடக்கப் போட்டியில் Royal Challengers Bengaluru மற்றும் Sunrisers Hyderabad அணிகள் மோதுகின்றன.
இந்த சீசன் விளையாட்டு மட்டுமின்றி, மார்க்கெட்டிங், பிராண்டிங், முதலீட்டு வருவாய் ஆகிய துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானி, டாடா, பிர்லா, அதானி போன்ற நிறுவனங்களின் அதிகரிக்கும் முதலீடு, IPL-ஐ ஒரு உலகளாவிய பிராண்டிங் மற்றும் முதலீட்டு மையமாக மாற்றியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications