குழந்தைகள் ஆதார் கார்டில் மேஜர் மாற்றம்.. இனி இந்த ஆவணம் கட்டாயம் : UIDAI அதிரடி அறிவிப்பு..

இந்தியாவில் பள்ளிக்கான அட்மிஷனில் தொடங்கி அரசின் நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக கேட்கப்படுகிறது.

நம் நாட்டில் இரண்டு விதமான ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசு பால் ஆதார் அட்டை வழங்குகிறது . அடுத்ததாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழக்கமான ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. பள்ளியில் அட்மிஷன் போடுவது தொடங்கி அரசின் ஸ்காலர்ஷிப், ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பது வரை அனைத்திற்குமே ஆதார் அட்டை முக்கியம்.

குழந்தைகள் ஆதார் கார்டில் மேஜர் மாற்றம்.. இனி இந்த ஆவணம் கட்டாயம் : UIDAI அதிரடி அறிவிப்பு..

எனவே தான் குழந்தை பிறந்து அவர்கள் ஐந்து வயது முடிவதற்குள் பால் ஆதார் அட்டையை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என சொல்லப்படுகிறது. தற்போது குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை பெறுவதில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ கொண்டு வந்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி இனி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை பெறுவதற்கு அவர்களின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்திருக்கிறார். பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் மட்டும் தான் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். சில சமயங்களில் பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என ஒரே குழந்தையின் பெயரில் இரண்டு ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் இந்த ஆதார் எண்கள் சில மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியிருக்கிறார் .

எனவே குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்றும் பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டும் தான் ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார் . இதற்காக யுஐடிஏஐ அமைப்பு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் பொது பதிவுத்துறையிடம் ஒருங்கிணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை ஆதாருடன் இணைத்து அதன் அடிப்படையில் ஆதார் வழங்கப்படும் என்றும் அடுத்த மூன்று மாதங்களில் இது நாடு முழுவதும் முழுவதுமாக நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு பிறப்பு சான்றிதழ் உடன் ஆதாரை இணைத்து விட்டால் ஒரே குழந்தையின் பெயரில் இரண்டு ஆதார் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகள் பெறப்படுவது கிடையாது, அதற்கு மாறாக அவர்களின் பெற்றோர் பயோமெட்ரிக் தரவுகள் தான் பெறப்படுகின்றன . இந்த குழந்தைகளுக்கு ஐந்து வயது முடிந்த பிறகு பெற்றோர் குழந்தைகளின் கருவிழி மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்து ஆதாரை புதுப்பித்துக் கொள்வது கட்டாயம்.

இனிவரும் நாட்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்யும் போது கட்டாயம் குழந்தையின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்தாக வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு ஆதார் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இருக்கிறது அந்த குழந்தைக்கு நீங்கள் ஆதார் அட்டை பெற போகிறீர்கள் என்றால் கட்டாயம் பெற்றோரில் யாரேனும் ஒருவருடைய ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகிய இரண்டையும் இ சேவை மையத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+