பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவு வகை பீட்சா. ஒரு காலத்தில் இதை சாப்பிட்டதை பெருமையாக சிலர் சொல்வர். நகர மக்கள் முதல் கிராம மக்கள் வரை பீட்சாவை விரும்ப தொடங்கியதன் விளைவாக இன்று சிறு நகரங்களில் கூட பீட்சா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் பீட்சாவுக்கு முன்பு மக்களிடம் இருந்த வரவேற்பு இப்போது இல்லை. பீட்சாவை காட்டிலும் வேறு சில உணவுகளை மக்கள் விரும்ப தொடங்கி விட்டார்கள் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

மக்கள் தற்போது பிரியாணி, பர்கர் மற்றும் பிரைடு சிக்கன் போன்ற பிற உணவு வகைகளை நுகர்வோர் விரும்பி ருசிக்க தொடங்கி விட்டனர். அதிலும் பிரியாணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டனர். இதனால் பீட்சா தனது கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
எலரா கேபிடல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கரண் தவுராணி கூறுகையில், பீட்சா விற்பனை சரிவுக்கு முதல் காரணம் மக்களின் உணவு விருப்பம் மாறி விட்டது. அடுத்ததாக சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி தளங்கள் பிரியாணி மற்றும் பிற பலதரப்பட்ட தேர்வுகள் உள்பட பலவிதமான உணவு விருப்பங்களை வழங்குகின்றன.
இதனால் நுகர்வோர் பீட்சா மற்றும் பர்கரை தேர்வு செய்வதில் இருந்து மாறி வேறு உணவுகளுக்கு மாறுகின்றனர். குறிப்பாக நுகர்வோர் பார்வையில் பிரியாணி தனித்துவமாக நிற்கிறது. ஏனென்றால் பர்கர்கள் மற்றும் பீட்சாக்களை போல் போக்குவரத்தின் போது பிரியாணி சொதசொதப்பாக மாறாது. பாரம்பரிய உணவகங்களை காட்டிலும் கிளவுட் கிச்சன்கள் டெலிவரி பார்டனர்களுக்கு அதிக லாப வரம்பை அளிக்கின்றனர்.
பிரைடு சிக்கன் அல்லது பர்கர் வகையுடன் ஒப்பிடுகையில் பீட்சா வகை வலுவான உள்ளூர் போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அடுத்த 3 காலாண்டுகளில் பீட்சாவின் விற்பனை குறைவாகவே இருக்கும். கடந்த 3-4 ஆண்டுகளாக ஆராயும்போது, துரித சேவை உணவகங்கள் சங்கிலி பிரிவில் பீட்சா அதன் சந்தை பங்கில் சரிவை சந்தித்துள்ளது. இதன் விளைவாக இது பர்கர் மற்றும் பிரைடு சிக்கன் பிரிவுகளுக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர காலச் சந்தையில் ஒரு சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. என்று தெரிவித்தார்.
பிலிப்ஸ் கேபிடல் நிறுவனத்தின் ஆய்வாளர் விஷால் குப்தா கூறுகையில், பீட்சா பிரிவில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக, பிரபலமான பீட்சா சங்கிலித் தொடரான டொமினோஸ், கடந்த அக்டோபரில் பெரிய பீட்சாக்களின் விலை பாதியாக குறைத்தது இந்த சந்தையில் டோசின், கோபிஸ்ஸா, லியோஸ் பிஸ்ஸேரியா, மோஜோபிஸ்ஸா, ஓவன்ஸ்டோரி மற்றும் லா பினோஸ் உள்ளிட்ட சிறிய மற்றும் பெரிய போட்டியாளர்கள் இருப்பதும் போட்டித்தன்மையின் எழுச்சிக்கு காரணம்.
அதேசமயம் அதிக நிறுவனங்கள் மற்றும் குறைந்த ஆர்டர் காரணமாக தற்போது பீட்சா சந்தை தேக்கமடைந்துள்ளது. ஜூபிலண்ட் போன்ற பிராண்டுகளுக்கான முக்கிய சவாலாக, தற்போது முதிர்ந்த பிராண்டாக இருக்கும் டொமினோஸை தாண்டி அவற்றின் வடிவங்களை கணிசமாக மேம்படுத்துவதாகும். தற்போது சுமார் 2,000 பீட்சா கடைகள் உள்ளன, 4-5 ஆண்டுகளுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லாமல் 3,000 கடைகள் இருக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications