தமிழ்நாட்டில் ஒவ்வொரு 500 கிலோமீட்டருக்கும் ஒரு தனித்துவமான சுவையில் பிரியாணி கிடைக்கும் அளவுக்கு, மக்கள் மத்தியில் பிரியாணி மீதான விருப்பும் உள்ளது. எந்த ஊரு பிரியாணி பெஸ்ட் என இளைஞர்கள் மத்தியில் பெரிய சண்டையெல்லாம் வந்திருக்கு. சண்டையை முடித்துவிட்டு இதே பிரியாணியைச் சாப்பிடத்தான் செல்வோம் அது வேறு விஷயம்.
இந்தியர்கள் பிரியாணியை வெறும் ஒரு உணவாகப் பார்ப்பதைத் தாண்டி ஒரு எமோஷனாகப் பார்க்கப்படுகிறது. கோபம் வந்தாலும் பிரியாணி, சந்தோஷமாக இருந்தாலும் பிரியாணி, கொண்டாட்டமாக இருந்தாலும் பிரியாணி, சோகமாக இருந்தாலும் பிரியாணி, மாத கடைசியில் கையில் காசு இல்லை என்றால் கூடக் குஸ்கா சாப்பிட்டு பிரியாணி தாகத்தைத் தணிக்கும் மக்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ 2023 ஆம் ஆண்டில் தனது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்ய உணவுகள் மற்றும் இதர முக்கியமான தரவுகளை வெளியிட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஸ்விக்கி மற்றும் Blinkit ஆகியவை தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் ஸ்விக்கி நிறுவனத்தில் சுமார் 10.09 கோடி பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளது மூலம் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகப் பிரியாணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது, ஸ்விக்கி தளத்திலும் 8வது ஆண்டாகப் பிரியாணி சேர்வானது குறிப்பிடத்தக்கது.
பிரியாணியைத் தொடர்ந்து சோமேட்டோ வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாகப் பிட்சா உள்ளது, இந்தியாவில் வெளிநாட்டு உணவுகளுக்கு மவுசு குறைந்து வருவதாகக் கூறப்படும் வேளையில் சோமேட்டோ தளத்தில் 7.45 கோடி ஆர்டர்களைப் பெற்று பீட்சா 2வது பிடித்தமான உணவாக உருவெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து 3வது இடத்தில் நூடில்ஸ் பவுல் உள்ளது, ஸ்விக்கி தளத்தில் சுமார் 4.55 கோடி நூடில்ஸ் பவுல் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. இந்த நூடில்ஸ் வைத்து பூமியை 22 முறை சுற்றலாம் எனவும் சோமேட்டோ தெரிவித்துள்ளது. இந்த 3 உணவில் உங்களுக்குப் பிடித்தமான உணவு எது கமெண்ட் பண்ணுங்க.
மேலும் சோமேட்டோ தளத்தில் பெங்களூர்-ஐ சேர்ந்த ஒருவர் அதிகப்படியாக 46,273 ரூபாய்க்கு உணவை ஆர்டர் செய்துள்ளார், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஒரு நாளில் சுமார் 121 ஆர்டர்களைச் செய்துள்ளார். மேலும் பெங்களூர்-ஐ சேர்ந்த ஒருவர் கிஃப்ட் ஆகச் சுமார் 1389 மூறை 6.6 லட்சம் ரூபாய்க்கு உணவை ஆர்டர் செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஹனீஸ் என்பவர் 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு நாளுக்கு 9 ஆர்டர் என்ற அடிப்படையில், சுமார் 3,580 ஆர்டர்களைச் செய்துள்ளார், இதன் மூலம் சோமேட்டோ இவருக்கு Nation's Biggest Foodie என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications