ஆன்லைன் உணவு டெலிவரி சேவை தளமான ஸ்விக்கி தனது வருடாந்திர வர்த்தக அறிக்கையை இந்த வருடமும் வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இந்திய மக்கள் அப்படி என்ன ஆர்டர் செய்து பசித்து ருசித்து உள்ளார்கள்.
ஸ்விக்கி மட்டும் அல்லாமல் உலகளவில் அதிக நுகர்வோரை கொண்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் மக்களின் தேடல் என்ன, விருப்பம் என்ன என்பது குறித்து ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பெரிய பட்டியலை வெளியிடும். இந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் ஆர்டர் செய்தது பற்றிய சில கவர்ச்சிகரமான டேட்டா-வை வெளியிட்டு உள்ளது.

எப்படி ஸ்பாட்டிபை வ்ராப் வெளியிட்டதோ அதேபோல் Swiggy Wrap அறிக்கையில் மக்களின் விருப்பமான உணவு, சிறந்த வாடிக்கையாளர், பெரிய ஆர்டர் மதிப்பு என பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டிலும் இந்திய மக்களுக்கு பிரியாணி மீதான காதல் தொடர்கிறது, ஸ்விக்கி தளத்தில் கடந்த 8 வருடமாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது பிரியாணி.
2023 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணிகளை ஆர்டர் செய்ததுள்ளனர். இந்த ஆண்டு 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்த ஹைதராபாத் நபர் ஒருவர் தான் பிரியாணி வெறியர் என்ற பட்டத்தை தட்டி சென்றுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு 4 பிரியாணிகளுக்கு மேல் பிரியாணி ஆர்டரப் செய்து அனைவரையும் அதிரவைத்துள்ளார்.
பிரியாணிகளை ஆர்டர் செய்வதில் ஹைதராபாத் மற்ற அனைத்து நகரங்களை முந்தியதுள்ளது. பிரியாணி என்றால் ஹைதராபாத் என்றால் பிரியாணி என்ற அளவுக்கு மாறியுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஹைதராபாத் விற்கப்படுவது மட்டும் அல்லாமல் மக்களின் விருப்ப உணவாகவு உள்ளது.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறாவது பிரியாணி ஆர்டரும் முத்துக்களின் நகரம் என அழைக்கப்படும் ஹைதராபாத் நகரில் இருந்து வந்துள்ளது. மேலும் இந்திய அளவில் ஆர்டர் செய்யப்படும் ஒவ்வொரு 5.5 பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது.
வெஜ் பிரியாணி என்றால் தக்காளி சாதம் என கலாய்க்க கூடாது.. பவாம் அவங்களுக்கும் பசிக்குமில்ல..!!


Click it and Unblock the Notifications