பிரியாணி போட இருக்கும் இந்திய ரயில்வேஸ்..!

உலகின் மிகப் பெரிய அரசு நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரயில்வேஸ். இந்த நிறுவனத்தின் ரயில் சேவையை நம்பி இந்தியாவின் கடைக் கோடி ஏழை முதல் ஏசி வகுப்பில் பயணிக்கும் சொகுசு பணக்காரர்கள் வரை பலர் இருக்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு சுமாராக இந்தியாவின் 2.2 கோடி மக்கள் பயணம் செய்ய வழி வகுக்கிறது இந்தியன் ரயில்வேஸ். உலகின் நான்காவது மிகப் பெரிய ரயில்வே என பல பெருமைகள் உண்டு.

இந்த பெருமைகள் பட்டியலில் இப்போது புதிதாக பிரியாணியும் சேர்ந்து இருக்கிறது. என்னங்க பிரியாணியா..? என ஆச்சர்யப் பட வேண்டாம்.

பிரியாணி புகழ்

பிரியாணி புகழ்

இந்தியாவில் பிரியாணியின் புகழ், நாளுக்கு நாள் அசுரத் தனமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வளர்ச்சியை இந்திய ரயில்வே நிர்வாகமும் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்து இருக்கிறது. ஆம் இனி, இந்திய ரயில்வே நிர்வாகமே இயக்கும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களில் பிரியாணி விற்க இருக்கிறார்களாம்.

பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ்

பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ்

இந்திய ரயில்வேஸ் இயக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரக ரயில்களில் வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி (ஒரு முட்டையா அல்லது இரண்டு முட்டையா என தெரியவில்லையே), சிக்கன் பிரியாணி என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாமாம். ஆக இனி பயணத்திலும் ஜாலியாக பிரியாணியை சுவைத்துக் கொண்டு கூ... சிக்கு புக்கு சிக்கு புக்கு என பயணம் செய்யலாம்.

விலைப் பட்டியல்

விலைப் பட்டியல்

வெஜ் பிரியாணி - 80 ரூபாய்
முட்டை பிரியாணி - 90 ரூபாய்
சிக்கன் பிரியாணி - 110 ரூபாய்க்கு விற்க இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் மத்திய ரயில்வே அமைச்சகம், ரயில்களில் விற்கும் உணவுகளின் விலையை அதிகரித்தது. அதில் தான் இந்த பிரியாணியைப் புதிதாக கொண்டு வருவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள். பிரியாணி உடன் ஸ்னாக் மீல் என ஒரு புது விஷயத்தையும் கொண்டு வர இருக்கிறார்களாம்.

ஸ்னாக் மீல்

ஸ்னாக் மீல்

இந்த ஸ்னாக் மீலில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கு தகுந்தாற் போல உணவுகளை வழங்க இருக்கிறார்களாம். இதையும் ரயில்வே நிர்வாகம் விரைவில் குறிப்பிடுமாம். இந்த ஸ்னாக் மீலின் விலை 50 ரூபாய். இதில் இன்னொரு நல்ல விஷயமும் நடந்து இருக்கிறது. அது தான் ஜந்தா மீல் விலை மாறாது என்கிற அறிவிப்பு. பின்ன ஏழைகளின் உணவாயிற்றே..!

ஜந்தா மீல்

ஜந்தா மீல்

ஜந்தா மீல் என்றால் மக்கள் உணவு என்று பொருள். இந்த உணவில் 7 பூரி மற்றும் கிழங்கு இருக்கும். இந்த உணவின் விலை 20 ரூபாயாக இருந்தது. இந்த மக்கள் உணவை இப்போதும் அதே 20 ரூபாய்க்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறது ரயில்வே அமைச்சகம். இந்த மக்கள் உணவில் சிக்கன் கரியையும் ஒரு உணவாக கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். அப்படியே ரயில்வேஸின் புதிய விலை விவரத்தையும் பார்த்து விடுவோம்.

ராஜ்தானி சதாப்தி, துரந்தோ 1 ஏசி

ராஜ்தானி சதாப்தி, துரந்தோ 1 ஏசி

காலை டீ - 35 ரூபாய்
காலை உணவு - 140 ரூபாய்
மதிய உணவு - 245 ரூபாய்
மாலை டீ - 140 ரூபாய்
இரவு உணவு - 245 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் முதல் ஏசி வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ராஜ்தானி சதாப்தி, துரந்தோ 2 & 3 ஏசி

ராஜ்தானி சதாப்தி, துரந்தோ 2 & 3 ஏசி

காலை டீ - 20 ரூபாய்
காலை உணவு - 105 ரூபாய்
மதிய உணவு - 185 ரூபாய்
மாலை டீ - 90 ரூபாய்
இரவு உணவு - 185 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏசி வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

துரந்தோ

துரந்தோ

காலை டீ - 15 ரூபாய்
காலை உணவு - 65 ரூபாய்
மதிய உணவு - 120 ரூபாய்
மாலை டீ - 150 ரூபாய்
இரவு உணவு - 120 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் ஸ்லீப்பர் வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஸ்டாண்டர்ட் மீல்

ஸ்டாண்டர்ட் மீல்

காலை உணவு சைவம் - 40 ரூபாய்
காலை உணவு அசைவம் - 50 ரூபாய்
மதியம் மற்றும் இரவு உணவு சைவம் - 80 ரூபாய்
மதியம் மற்றும் இரவு உணவு முட்டைக் கறி - 90 ரூபாய்
மதியம் மற்றும் இரவு உணவு சிக்கன் கறி - 130 ரூபாய்

இந்த பட்டியலில் தான் மேலே சொன்ன விலையில் பிரியாணி வகைகளும் வர இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+