பாட்டில் தண்ணீர் நிறுவனமான பிஸ்லேரி இன்டர்நேஷனல், அதன் முதல் சர்வதேச விரிவாக்கத்தைச் செய்துள்ளது, துபாயை தளமாகக் கொண்டு பல துறையில் வர்த்தகம் செய்யும் நாசர் அப்துல்லா லூட்டா குழுமத்துடன் உற்பத்தி மற்றும் பாட்டிலிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் எஃப்எம்சிஜி துறையில் இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பிஸ்லெரி இன்டர்நேஷனலை ரூ. 6,000-7,000 கோடிக்கு வாங்குவதற்கு தயாராக உள்ளது மட்டும் அல்லாமல் தற்போதைய நிர்வாகம் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இருக்கும் என்ற முக்கிய கண்டிஷன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் வேளையில்.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. துபாயில் பாட்டில் குடிதண்ணீர் துறையில் கடுமையான போட்டி உள்ளது, இந்த நிலையில் பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அனுபவம் நாசர் அப்துல்லா குழுமத்திற்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
நாசர் அப்துல்லா குழுமம்
25 வருட பழமையான நாசர் அப்துல்லா குழுமம் பயணம், கப்பல் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், மினரல் வாட்டர், ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி எனப் பல துகையில் வர்த்தகம் செய்து வர்த்தகம் செய்து வருவது மட்டும் அல்லாமல் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகப்படியான ஆர்வத்தைக் கொண்டுள்ளது.
எமிரேட்ஸ் டிரிங்க்கிங் வாட்டர்
இந்த நிலையில் நாசர் அப்துல்லா குழுமம் நிறுவனமான எமிரேட்ஸ் டிரிங்க்கிங் வாட்டர் நிறுவனம் இந்திய நிறுவனமான பிஸ்லேரி உடன் இணைந்து குடி தண்ணீரை துபாயில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்ய உள்ளது.
துபாய் தொழிற்சாலை
துபாய் தொழிற்சாலையில் பாட்டிலில் பேக் செய்யப்படும் தண்ணீர் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய பகுதிகளில் பிரீமியம் பொது மற்றும் நவீன வர்த்தகக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் மின்வணிகத் தளங்கள் வழியாக விற்பனை செய்ய உள்ளது.
பிஸ்லேரி இன்டர்நேஷனல்
இந்த நிலையில் பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஏஞ்சலோ ஜார்ஜ் கூறுகையில் உலகின் மிகப்பெரிய பாட்டில் தண்ணீர் சந்தைகளில் துபாய் ஒன்றாகும், வெப்பமான காலநிலை காரணமாக, வீட்டில் RO சுத்திகரிப்புத் தொழில் இல்லாததால், தண்ணீர் உப்புத்தன்மை வாய்ந்தது உள்ளது.
குடிநீர்
இதனால் துபாயில் மக்கள் குடி நீரை பாட்டில் வாயிலாகவே அதிகளவில் நுகர்கின்றனர்.மூன்றாவது காரணம் அதிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் மிக விரைவான விரிவாக்கம் இருக்கும் காரணத்தாலும் பாட்டில் தண்ணீர் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஏஞ்சலோ ஜார்ஜ்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
தற்போது, அந்நாட்டின் நிறுவனங்கள் தான் UAE இன் பாட்டில் தண்ணீருக்கான சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் புதிய பிராண்ட் மற்றும் கூட்டணி நுழைவதில் இடையூறுகள் உருவாக்கலாம் என்று ஜார்ஜ் கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவது, மத்திய கிழக்கில் உள்ள மற்ற சந்தைகளில் பிஸ்லேரியின் விரிவாக்கத்திற்கு வழி வகுக்கும், என்றார்.
தினசரி தயாரிப்பு
நாசர் அப்துல்லா குழுமம் நிறுவனமான எமிரேட்ஸ் டிரிங்க்கிங் வாட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்நிறுவனம் ஒரு நாளுக்கு 45,000 அட்டைப்பெட்டிகள் அளவிலான குடிநீரை தயாரிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
2015 தோல்வி
பிஸ்லேரி மத்திய கிழக்கு நாடுகளில் 2015 இல் franchise distribution model-ஐ தொடங்கியது, ஆனால் அது சில மாதங்களிலேயே இது நீக்கப்பட்டது. இந்தியாவில், பிஸ்லேரி இன்டர்நேஷனல் 150க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளையும், 7,500 டிரக்குகளுடன் 6,000க்கும் அதிகமான விநியோகஸ்தர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது.
பிற வர்த்தகம்
மினரல் வாட்டர் பிராண்டான பிஸ்லேரி குடிநீர் மட்டும் அல்லாமல் கூடுதலாக இந்நிறுவனம் பிரீமியம் ஸ்பிரிங் வாட்டர் பிராண்டான வேடிகாவை விற்பனை செய்கிறது. அதன் போர்ட்ஃபோலியோவில் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் லிமோனாட்டா மற்றும் ஸ்பைசி, சோடா மற்றும் பழ பானங்கள் ஆகியவை அடங்கும்.
போட்டி
இந்தியாவில் Coca-Cola-வின் Kinley மற்றும் PepsiCo's Aquafina உடன் போட்டியிடும் பிஸ்லேரி நிறுவனம், 250 மில்லி முதல் 1 லிட்டர் வரையிலான பாட்டில்களையும், 20-லிட்டர் பேக்குகள் மற்றும் சிறிய பாட்டில்கள் உட்பட நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் சொந்த ஆப் கொண்டு இயங்கி வருகிறது.
32 சதவீத சந்தையை
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டில்-குடிநீர் சந்தையில் பிஸ்லேரியின் பங்கு சுமார் 32 சதவீத சந்தையைக் கொண்டு உள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் விற்பனை துறையில் அமைப்புசாரா பிராண்டுகள் அதிக அளவில் இருப்பதன் மூலம் தீவிர போட்டி நிறைந்த சந்தையாக உள்ளது.


Click it and Unblock the Notifications