2020ஆம் ஆண்டில் பிட்காயின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்ததன் வாயிலாக 2 வருடங்களுக்குப் பின் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பங்குச்சந்தை கச்சா எண்ணெய் சந்தைகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடி வந்த நிலையில் தங்கமும், கிரிப்டோகரன்சியும் முக்கியமான முதலீடாக மாறியது.
கொரோனா பாதிப்பின்
இதன் வாயிலாக மார்ச் மாதம் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட முதலீட்டுச் சந்தை சரிவுக்குப் பின் பிட்காயின் மீதான முதலீடுகள் தாறுமாறாக அதிகரித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 9 மாத வர்த்தகத்தில் புதிய வரலற்று உச்சத்தை அடையும் நிலையில் உள்ளது.
பிட்காயின் உச்ச விலை
கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள் 2017ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தில் இருந்து போது ஒரு பிட்காயின் விலை 19,920.53 டாலர் என விலையை அடைந்து சாதனை படைத்தது. அதன் பின்பு தென்கொரியா, ஜப்பான், இந்தியா எனப் பல நாடுகள் கிரிப்டோகரன்சி மீது தடை விதித்த காரணத்தால் பிட்காயின் விலை மளமளவெனச் சரிந்தது.
முதலீட்டாளர்கள் மனநிலை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளின் வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்த நிலையில் முதலீட்டாளர்கள் வேறு வழியில்லாமல் தங்களது முதலீட்டைக் காப்பாற்றப் பிற கிரிப்டோகரன்சியைக் காட்டிலும் பிட்காயின் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
சிறப்பான வளர்ச்சி
இதன் வாயிலாகவே பிட்காயின் மதிப்புத் தற்போது சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு அதிகப்படியாக 19,347.62 டாலரை அடைந்துள்ளது. இது அடுத்த சில நாட்களில் வரலாற்று உச்ச அளவான 19,920.53 டாலர் அளவீட்டைத் தாண்டும் என எதிர்பார்க்க்படுகிறது.
20,000 டாலரை அடையும்
பட்காயின் மதிப்பு 2020 ஜனவரி மாத துவக்கத்தில் வெறும் 7,200 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் ஆண்டில் முடிவில் 20,000 டாலரை அடையும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் பிட்காயின் முதலீட்டாளர்கள் சுமார் 167 சதவீத லாபத்தை அடைந்துள்ளனர்.
உதாரணமாக நீங்கள் ஜனவரி மாதம் 1 லட்சம் ரூபாய் தொகையைப் பிட்காயினில் முதலீடு செய்திருந்தால் தற்போது உங்கள் முதலீட்டின் மதிப்பு 2,67,000 ரூபாய்.


Click it and Unblock the Notifications