உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். அவ்வப்போது அதிரடியாக ஏற்றம் காணுவதும், அதிரடியான சரிவினைக் காண்பதும் உண்டு. பிட்காயினில் ஏற்ற இறக்கம் அதிகம் என்பதால், இது பெரு நிறுவன முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கின்றது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனாலேயே சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் மாறி வருகிறது.
நேற்று தான் பிட்காயின் மதிப்பானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து, 15% மேலாக வீழ்ச்சியினை பதிவு செய்து, 51,700 டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டு, பின்னர் நேற்று 52,000 டாலர்களுக்கு அருகில் இருந்தது.
பிட்காயின் ஏற்றம்
இந்த நிலையில் இன்று மீண்டும் 57,095.75 டாலர்களைத் தொட்டுள்ளது. இது கடந்த 24 மணி நேரத்திற்குள் கிட்டதட்ட 8% ஏற்றம் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பெரும் சரிவினைக் கண்ட நிலையில் இன்று மீண்டும் பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது.
புதிய உச்சம்
கடந்த ஏப்ரல் 14 அன்று பிட்காயின் மதிப்பானது 64,869.78 டாலர்களை எட்டியது. அதன் பிறகு நேற்று 52,000 டாலர்களை எட்டி, இன்று மீண்டும் 57,000 டாலர்களையும் தொட்டது. இது coinbase நிறுவனம் 8 ஆண்டுகளில் 4,000 மடங்கு லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்ததையடுத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், 291.8 மில்லியன் டாலர் பங்குகளை விற்பனை செய்துள்ளது. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இன்னும் அதிகரிக்கும்
பிட்காயின் மதிப்பானது 60,000 டாலர்களுக்கு மேலாக தொடர்ந்து இருந்தால், இது இன்னும் அதிகரிக்கலாம். முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தொடர்ந்து அதிகரிக்கலாம். இது தற்போதைய விலையில் இருந்து மீண்டும் உச்சம் தொடும். தற்போதுள்ள வரலாற்று உச்சத்தினையும் இது உடைக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
குறிப்பாக பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தனை குறைவாகவே வைத்துள்ள நிலையில், இது இன்னும் பிட்காயின் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைவான வட்டி விகிதம், பிட்காயினில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications