உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் சந்தை மூலதனம் 900 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இது இன்று 52,877.50 டாலர்கள் என்ற புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.
பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது.
அதிலும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்களான டெல்சா, மாஸ்டர்கார்டு, பிஎன்ஒய் மெல்லன் உள்ளிட்ட நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொள்ளவதற்கான அறிகுகள் உள்ள நிலையில், பிட்காயின் மதிப்பானது இன்னும் அதிகரித்து வருகின்றது.
நிபுணர்கள் எச்சரிக்கை
பல நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பிட்காயினை, இன்னும் பரவலாக டிஜிட்டல் கட்டணமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பிட்காயின் அதிகளவிலான பரிவர்த்தனைக்கு ஒரு திறமையான முறையல்ல. இதன் மதிப்பு ஏற்ற இறக்கம் 80% அதிகம்.
ஏற்ற இறக்கம் அதிகம்
இது யூரோவை விட ஒரு டஜன் மடங்கி அதிகமாகும். இதே ரஷ்யாவின் ரூபிளை விட ஏழு மடங்கு அதிகம் என்று, Simplify Asset Managementன் நிர்வாக பங்குதாரர், ஹார்லி பாஸ்மேன் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பிட்காயின் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதே கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதன் சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
பிட்காயின் நிலையில்லாதது
இதற்கிடையில் நிபுணர்கள் பிட்காயின் நீண்டகாலத்திற்கு பிட்காயின் நிலையற்றதாக இருக்கும். ஆனால் மத்திய வங்கிகளில் என்ன நடக்கிறது என்பதோடு, அதன் மேக்ரோ பொருளாதாரத்தினை அடிப்படையாக கொண்டது எனவும் கூறியுள்ளனர். இதனால் நீண்டகால நோக்கில் பிட்காயின் எப்படி இருக்கும் என்பதனை கணிப்பது கடினம்.. இது நிலையில்லாதது என்றும் கூறியுள்ளனர்.
அதிகரித்து வரும் முதலீடு
இதே ஹெட்ஜ் ஃபண்ட் ஸ்கைப்ரிட்ஜ் கேப்பிட்டலின் நிறுவனர், Anthony Scaramucci, இதன் தேவை மற்றும் சப்ளையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு முடிவுக்குள் 1,00,000 டாலர்களை எட்டலாம் என்றும் கூறியுள்ளார். அதோடு ஸ்கைப்ரிட்ஜ் பிட்காயினிலும் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பு
இப்படி சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தினை பிட்காயின் ஈர்த்து வருகிறது பிட்காயின். இதனால் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் இருந்தே உச்சம் தொட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், தொடர்ந்து பிட்காயினில் தங்களது முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications