உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் விலையானது, நேற்று 6.64% அதிகரித்து 61,000 டாலர்களை தாண்டியுள்ளது.
தற்போது பரவலாக உலகளவில் பிட்காயின் முதலீடு என்பது அதிகரித்து வருகின்றது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பிட்காயின் முதலீடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
குறிப்பாக அமெரிக்க முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் டெஸ்லா போன்ற சர்வதேச முதலீட்டாளர்கள் பிட்காயினில் முதலீடுகளை செய்துள்ளனர்
நிபுணர்கள் எச்சரிக்கை
பரவலாக பல நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இன்னும் பரவலாக டிஜிட்டல் கட்டணமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பிட்காயின் அதிகளவிலான பரிவர்த்தனைக்கு ஒரு திறமையான முறையல்ல. இதன் மதிப்பு ஏற்ற இறக்கம் மிக அதிகம்.
ஏற்ற இறக்கம் அதிகம்
கடந்த சனிக்கிழமையன்று மட்டும் பிட்காயின் மதிப்பானது 6.64% அதிகரித்து, 61,073.71 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய அமர்வோடு ஒப்பிடும்போது 3,802.67 டாலர்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 4 அன்று பிட்காயினின் குறைந்த விலையானது 27,734 டாலர்களாகும். அந்த விலையில் இருந்து ஒப்பிடும்போது 120.2% அதிகரித்துள்ளது.
பிட்காயின் நிலையில்லாதது
இதற்கிடையில் நிபுணர்கள் பிட்காயின் நீண்டகாலத்திற்கு பிட்காயின் நிலையற்றதாக இருக்கும். எனினும் நிறுவன ஆர்வம் மற்றும் ஊக தேவைகளுக்கான மத்தியில் கடந்த ஆண்டில் பிட்காயின் மதிப்பானது 1000% அதிகரித்தது. இது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும், பலவீனமான டாலருக்கு எதிராகவும், தங்கத்தினை போல முதலீட்டாளர்கள் பார்த்தனர். இந்த நிலையில் தான் பிட்காயின் மதிப்பானது கடந்த ஆண்டில் அபரிதமான வளர்ச்சியினைக் கண்டது.
அதிகரித்து வரும் முதலீடு
நிபுணர்கள் அதிகரித்து வரும் முதலீடுகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு முடிவுக்குள் பிட்காயின் 1,00,000 டாலர்களை எட்டலாம் என்றும் கூறுகின்றனர். பல நிறுவனங்களும் தற்போது இதனை ஒரு டிஜிட்டல் நாணயமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாலும், பிட்காயினி ஏற்ற இறக்கம் என்பதால், பெரு நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒத்து வரலாமே தவிர, சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications