கிரிப்டோகரன்சி பயன்படுத்துவதிலும், வர்த்தகத்தில் கொண்டு வரவும் பல நாடுகள் தயாராகி வரும் நிலையில் அமெரிக்கா ஒரு படி முன்னோடியாகப் பிட்காயின் வர்த்தகத்தை ரீடைல் சந்தைக்குள் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது.
பிட்காயின் ஏடிஎம்
அமெரிக்காவில் நியூயார்க் உட்படப் பல முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியான பிட்காயினை வாங்கவும், விற்பனை செய்யவும், பிட்காயின் பேலென்ஸ் வைத்துப் பணத்தை வித்டிரா செய்யும் வகையில் பிட்காயின் ஏடிஎம் வைக்கப்பட்டு உள்ளது.
எண்ணிக்கையில் பெரிய அளவில் உயர்வு
கடந்த வருடம் சில எண்ணிக்கையில் மட்டுமே இருந்த பிட்காயின் ஏடிஎம், நடப்பு ஆண்டில் காஃபி ஷாப் முதல் பெட்ரோல் பங்க் வரையில் மக்கள் அதிகம் இருக்கும் பெரும்பாலான இடங்களில் இந்த ஏடிஎம் வைக்கப்பட்டு உள்ளது.
28,185 பிட்காயின் ஏடிஎம்கள்
காயின்பிளிப், காயின்கிளவுட் போன்ற கிசோகி நிறுவனங்கள் 2021ல் மட்டும் அமெரிக்காவில் 1000த்திற்கும் மேற்பட்ட இடங்களை இந்தப் பிட்காயின் ஏடிஎம்களை நிறுவியுள்ளது. ஜனவரி மாத தரவுகள் படி அமெரிக்காவில் மட்டும் சுமார் 28,185 பிட்காயின் ஏடிஎம்கள் உள்ளது. இதில் 10000 ஏடிஎம்கள் கடந்த 5 மாதத்தில் நிறுவப்பட்டவை.
அமெரிக்காவின் நிலை
இதனால் அமெரிக்காவில் தற்போது பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியைத் தடுக்கவோ, தடை செய்யவோ முடியாத நிலை உருவாகியுள்ளது. பேபால் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி கொண்டு பொருட்களையோ, அல்லது சேவையையோ அளிக்கிறது.
கிரிப்டோகரன்சி பேமெண்ட் முறை
மேலும் பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளைப் பிட்காயின் மற்றும் இதர முக்கியமான கிரிப்டோகரன்சியைப் பேமெண்ட் முறையாக ஏற்ற திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்த சில வருடத்தில் அமெரிக்காவில் கிரிப்டோ முக்கியப் பேமெண்ட் முறையாக இருக்கும்.
இந்தியாவில் என்ன நிலை..?
ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது, இந்திய அரசு கிரிப்டோகரன்சியை வைத்திருத்தலும், வர்த்தகம் செய்தாலும், விற்பனை செய்தாலும், அதை உருவாக்கினாலும் கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications