கிரிப்டோ உலகின் ராஜா-வாக விளங்கும் பிட்காயின் டிசம்பர் மாதத்தின் கடைசி 2 வாரத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், பிட்காயின் 5 சதவீதம் வரையில் சரிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் பிட்காயின் விலை 5 மாதத்திற்குப் பின் முதல் முறையாக 40000 டாலர் அளவில் இருந்து சரிந்து 39,558 டாலர் அளவீட்டை அடைந்தது. இது நவம்பர் பிட்காயின் அடைந்த 69,000 டாலர் என்ற உச்ச விலை அளவை விடவும் 40 சதவீதம் குறைவாகும்.
ஆனால் இன்று மொத்தமும் மாறியுள்ளது...
அமெரிக்கப் பெடரல் வங்கி
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைத் திட்டமிட்டுக் காலத்திற்கு முன்பாகவே உயர்த்துவதில் உறுதியாக இருக்கிறது. இதன் வாயிலாகத் திங்கட்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் பங்குச்சந்தை சரிவுக்குத் தள்ளப்பட்டது..
முதலீட்டாளர்கள்
இதனால் முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் மாற்று முதலீடு தேவைப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகள் முக்கிய முதலீடாக மாறியுள்ளது. இதனால் நேற்று இரவில் இருந்து பிட்காயின் அதிகப்படியான முதலீட்டைப் பெற்று வருகிறது.
பிட்காயின் விலை
இன்று காலை வர்த்தகத்தில் பிட்காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான முதலீட்டைப் பெற்று 39,558 டாலர் சரிவில் இருந்து 42,000 டாலரை கடந்துள்ளது. தற்போது ஒரு பிட்காயின் விலை 0.45 சதவீதம் உயர்ந்து 42,145.89 டாலராக உயர்ந்துள்ளது.
டாப் 10 கிரிப்டோகரன்சி
டாப் 10 கிரிப்டோகரன்சியில் பிட்காயின் உயர்ந்தாலும் பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் சரிந்துள்ளது. குறிப்பாக எதிரியம் 1.57 சதவீதம் சரிந்து 3,114.07 டாலராகவும், BNB 1.83 சதவீதம் சரிந்து 434.77 டாலராகவும், சோலானா 4.47 சதவீதம் சரிந்து 136.30 டாலராகவும் உள்ளது. இதேபோல் கார்டானோ, ரிப்பிள், போல்காடாட், அவலான்சி, டோஜ்காயின், ஷிபா இனு என அனைத்தும் சரிவில் உள்ளது.


Click it and Unblock the Notifications