சற்றே ஆறுதல் தந்த பிட்காயின்.. பலத்த வீழ்ச்சிக்கு பிறகு 12% ஏற்றம்..!

பிட்காயின் என்றாலே அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை காணும் ஒரு கிரிப்டோகரன்சியாகத் தான் பார்க்கப்படுகிறது. இதனால் தான் இதனை பெரும் முதலீட்டாளர்கள் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக பார்க்கின்றனர்.

சமீப காலமாக பிட்காயினை பற்றி பேச வைத்தவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான்.

ஏனெனில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, பிட்காயின் மதிப்பானது வரலாறு காணாத ஏற்றத்தினை கண்டது.

சரிவில் பிட்காயின்

சரிவில் பிட்காயின்

அதோடு டெஸ்லா உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் பிட்காயினை தங்களது பேமெண்ட் ஆப்சனாகவும் மாற்றின. எனினும் டெஸ்லாவின் அறிவிப்புக்கு பிறகு பிட்காயினில் முதலீடுகள் குவியத் தொடங்கின. ஆனால் சமீப வாரங்களுக்கு முன்பு பிட்காயினை பேமெண்ட் ஆப்சனாக ஏற்ற கொள்ள முடியாது. எனினும் தங்களது முதலீட்டினை எடுக்கவில்லை என்று எலான் மஸ்க் கூறினார். இதன் பின்னர் அனுதினமும் பிட்காயின் மதிப்பானது அதபாதாளம் நோக்கி சென்றது.

இன்று சற்று ஏற்றம்

இன்று சற்று ஏற்றம்

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சீனாவின் அறிவிப்பும் வந்தது. சீனாவும் பிட்காயினை தடை செய்த நிலையில், பிட்காயின், எதர் உள்ளிட்ட பல நாணயங்கள் சரிவினைக் நோக்கி சென்றன. இந்த நிலையில் இன்று பலத்த சரிவுக்கு பின்னர் சற்றே ஆறுதலை கொடுக்கும் விதமாக சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

பிட்காயின் விலையானது தற்போது 11.61% அதிகரித்து, 37,600.70 டாலர்களாக (இந்திய நேரப்படி 8.11 PM - COINDESK ) காணப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 31,179.69 டாலர்களாகும். இதே உச்சமானது 38,727.73 டாலர்களாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 29.87% சரிவில் காணப்படுகிறது.

எதிர்காலம் எப்படி?

எதிர்காலம் எப்படி?

இந்தியாவில் பிட்காயின் குறித்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் இல்லை. இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. இது நிஜ கரன்சிகளை விட அதிக மதிப்புள்ளவையாக இருந்தாலும், இது இன்னும் நிலையற்ற முதலீடாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிட்காயினை யார் விற்பனை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆக இன்று வரையில் இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று யாருக்கும் முழுமையாக தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+