பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயரும்.. ஜேபி மோர்கன் கணிப்பால் முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!

2020ல் உலக நாடுகளின் பங்குச்சந்தை, வர்த்தக சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீட்டு தளமாக விளங்கிய தங்கமும், பிட்காயினும் தான். பிட்காயின் முதலீட்டில் ஆபத்து காரணிகள் அதிகமாக இருந்தாலும் பல தனியார் முதலீட்டு நிறுவனம், பென்ஷன் பண்ட் முதலீட்டாளர்களும் தொடர்ந்த அதிகளவிலான முதலீட்டை செய்த காரணத்தால் இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்தது.

இதன் வாயிலாக 2020ல் முக்கிய முதலீட்டு தளமாக மாறிய பிட்காயின் சுமார் 300 சதவீத லாபத்தை அள்ளிக்கொடுத்தது. இதேபோன்ற ஒரு அதிரடி வளர்ச்சியை 2021ஆம் ஆண்டும் பிட்காயின் பதிவு செய்யும் என ஜேபி மோர்கன் கணித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2021ல் பிட்காயின்

2021ல் பிட்காயின்

பிட்காயின் மதிப்பு கடந்த ஒரு மாத காலம் அதாவது டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரையிலான காலத்தில் 17,700 டாலரில் இருந்து சுமார் 35,751 டாலர் என மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பாக புத்தாண்டில் மட்டும் சுமார் 5,500 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

இதனால் 2021ல் தங்கத்தை காட்டிலும் கிரிப்டோகரன்சி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜேபி மோர்கன் கணிப்பு

ஜேபி மோர்கன் கணிப்பு

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி நிதியியல் சேவை மற்றும் முதலீட்டு சந்தை ஆய்வு நிறுவனமான ஜேபி மோர்கன் 2021ஆம் ஆண்டிலும் பிட்காயின் 2020ஐ போலவே 300 சதவீத வளர்ச்சியை அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளது.

1,00,000 டாலர் வரை உயரும்

1,00,000 டாலர் வரை உயரும்

இதன் மூலம் பிட்காயின் மதிப்பு தற்போதைய மதிப்பான 35,000 டாலரில் இருந்து சுமார் 1,00,000 டாலர் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த உயர்வும் 1,00,000 டாலர் அடைந்த பின்பு தொட வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளது.

17 சதவீத சரிவு

17 சதவீத சரிவு

திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 35,000 டாலர் அளவீட்டை அடைந்த பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 17 சதவீத சரிவை எதிர்கொண்டது. இது 2020 மார்ச் மாதம் ஏற்பட்ட சரிவை விடவும் மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்த 2 நாள் வர்த்தகத்தில் இந்த சரிவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளது.

 

தங்கத்துடன் போட்டி

தங்கத்துடன் போட்டி

இன்றளவும் தங்கம் மீதான முதலீட்டுடன் பிட்காயின் முதலீடு போட்டிப்போட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தனியார் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடவும் டிஜிட்டல் தங்கமாக இருக்கும் பிட்காயினில் தான் விரும்பி அதிகப்படியான
முதலீட்டை செய்து வருவதாக ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

தங்கம் vs பிட்காயின்

தங்கம் vs பிட்காயின்

தங்க முதலீட்டு சந்தையில் தங்க பத்திரம், தங்க பார், தங்க காயின் மீது செய்யப்பட்டும் தனியார் முதலீடுகளை ஒப்பிடும் போது, 647 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்ட பிட்காயின் மீதான தனியார் முதலீடுகள் இதன் மதிப்பை 1,56,000 டாலர் வரையில் உயர்ந்திருக்கும்.

பிட்காயின் பின்தங்கியது

பிட்காயின் பின்தங்கியது

ஆனால் பல நாடுகளில் இருக்கும் தடையின் காரணமாக இதன் மதிப்பு தற்போது பெரிய அளவில் பின்தங்கியுள்ளது.

ஆனால் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் பிட்காயின் முதலீடுகள் தங்க முதலீட்டு இணையாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+