டிசம்பர் 5, 2024 இன்று கிரிப்டோ சந்தையில் முன்னணி காயின் பிட்காயின் ஆனது முதன்முறையாக $1 லட்சம் என்ற அளவைத் தாண்டி $102,727 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஜனவரி 2025 இல் அமெரிக்காவின் அரியணையை டொனால்ட் டிரம்ப் ஏற்பதற்கு முன்னதாக பிட்காயின் சிறப்பான முன்னேற்றமாக உள்ளது. டிரம்ப் பதவியேற்றதும் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் பிட்காயின் சமீப காலமாக உயர்வை சந்தித்து வருகிறது.
டிரம்ப் நிர்வாகம் கிரிப்டோகரன்சி நட்புக் கொள்கையை கொண்டு வர முடியும் என்று கிரிப்டோ வர்த்தகர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக பிட்காயினில் சாதனை உயர்வு காணப்படுகிறது. அதேபோல், பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவாக பேசியுள்ளது பிட்காயின் விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது. மாஸ்கோவில் நடந்த பொருளாதார மன்றத்தில் அவர் பிட்காயின் மற்றும் மெய்நிகர் சொத்துக்களை யாரும் தடை செய்ய முடியாது என்று கூறினார் இதுவும் பிட்காயின்களுக்கு சாதகமாக அமைந்தது.

இன்று பிட்காயின் $102,727 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் 5, 2024 அன்று அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பிட்காயின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவை உலகின் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி தலைநகராக மாற்றுவதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதேபோல், பால் அட்கின்ஸை செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) இன் தலைவராக ஆக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதால் பிட்காயின் தொடர்ந்து ஏற்றம் பெற்றுள்ளது.
2017 முதல், அட்கின்ஸ் டிஜிட்டல் சொத்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பான டிஜிட்டல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் இணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கிரிப்டோகரன்சியின் எதிர்ப்பாளராகக் கருதப்படும் கேரி ஜென்ஸ்லரை மாற்றி அவருக்கு பதில் பால் அட்கின்ஸ் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
2002 முதல் 2008 வரை SEC கமிஷனராக இருந்த அட்கின்ஸ், 2009 இல் ஆலோசனை நிறுவனமான Patomak Global Partners ஐ நிறுவினார். அதன் வாடிக்கையாளர்களில் வங்கி, வர்த்தகம் மற்றும் கிரிப்டோகரன்சி தொழில்களில் உள்ள நிறுவனங்கள் அடங்கும். அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் அமெரிக்காவை பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் கவனம் செலுத்துகிறார்.
2024 ஆம் ஆண்டில், பிட்காயின் விலை 134 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து பிட்காயின் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் பிட்காயின் விலை 2 லட்சம் டாலர்களாக இருக்கும் என்று பெர்ன்ஸ்டீனின் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது தற்போதைய நிலையில் இருந்து இந்த கிரிப்டோகரன்சியில் இரட்டை உயர்வு இருக்கலாம். டிரம்ப் அமெரிக்காவில் பிட்காயின் இருப்பை உருவாக்குவார் எனவும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரும்காலங்களில் பிட்காயின் வலுவான வாங்குதல்கள் உள்ளது. இதன் காரணமாகவும் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் கிரிப்டோகரன்சி ஆதரவாளர்களிடமிருந்து பெரும் நிதி ஆதரவைப் பெற்றார். அவர்களில் சிலர் குடியரசுக் கட்சியின் மெகா நன்கொடையாளர் எலான் மஸ்க் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் ஆவர். இந்த நிலையில், பிட்காயின் $100,000 ஐ எட்டிய செய்திக்கு எக்ஸ் இல் பதிலளித்த மஸ்க் "வாவ்" என்று குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications