2023ல் முதன் முறையாக $17,000 தாண்டிய பிட்காயின்.. என்ன காரணம் தெரியுமா?

கிரிப்டோகரன்சிகள் என்றாலே பிட்காயின் எனும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட டிஜிட்டல் கரன்சியானது, இன்று வலுவான ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து டாலரின் மதிப்பானது சற்றே தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், பங்கு சந்தையும் தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.

குறிப்பாக ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பங்கு சந்தையானது வலுவான எழுச்சியினை பெற்றுள்ளன. இதேவேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கிரிப்டோ குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

பிட்காயின் மதிப்பு

பிட்காயின் மதிப்பு

இந்த காலகட்டத்தில் பிட்காயின் மதிப்பும் தொடர்ந்து நேர்மறையான பாதைக்கு மாறி வருகின்றது.

காயின் மார்கெட் கேப் தளத்தின் அடிப்படையில் பிட்காயின் மதிப்பானது 1.5% அதிகரித்து, 17,200 டாலர்களுக்கும் மேலாக காணப்படுகின்றது. இதற்கிடையில் இதன் சந்தை மதிப்பு 331.31 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பானது 83% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

ஆல் டைம் உச்சத்தில் இருந்து சரிவு

ஆல் டைம் உச்சத்தில் இருந்து சரிவு

பிட்காயின் மதிப்பானது தற்போதும் அதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து, 75% சரிவில் தான் காணப்படுகின்றது. இது கடந்த நவம்பர் 10, 2021ல் ஆல் டைம் உச்சமாக 68,789.63 டாலர்களை தொட்டது.

இதற்கிடையில் கடந்த ஆண்டில் தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் 52 வார உச்ச விலையானது 48,201.75 டாலராகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 15,480 டாலர்களாகும். நடப்பு ஆண்டில் இந்த கரன்சியில் 4.42% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

பிட்காயினின் முக்கிய லெவல்

பிட்காயினின் முக்கிய லெவல்

பிட்காயினின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆன 16,800 டாலர்களை உடைத்து, தற்போது 2023ல் முதல் முறையாக 17,000 டாலர்களை உடைத்துள்ளது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் நிலை என்பது பெரும் கேள்வி குறியாகியுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது அதிக விகித உயர்வுகள் மற்றும் மோசமான நிலைப்பாடு குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் என பலவும் முதலீட்டாளர்களின் கவனத்தினை திருப்பியுள்ளது எனலாம்.

திரும்ப ஏற்றம் காணும் கிரிப்டோகரன்சிகள்

திரும்ப ஏற்றம் காணும் கிரிப்டோகரன்சிகள்

அமெரிக்காவின் சிபிஐ விகிதம், அமெரிக்காவின் சேவை குறித்தான தரவு என பலவும் சந்தைக்கு எதிராக வந்துள்ளது. இது இன்னும் அமெரிக்க பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் இருப்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையும் திரும்ப அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் பிட்காயின் மதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல கிரிப்டோகரன்சிகளும் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளது. எனினும் இது முன்பை போல பெரியளவில் இருக்குமா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

மற்ற கரன்சிகளின் நிலை

மற்ற கரன்சிகளின் நிலை

பிட்காயின் தற்போது 1.71% ஏற்றத்திலும், இதே எத்திரியம் 4.45% ஏற்றத்திலும், எக்ஸ்ஆர்பி 3.45% ஏற்றத்திலும், கார்டானோ 11.34% ஏற்றத்திலும், டோஜ்காயின் 8.43% ஏற்றத்திலும், ஸ்டெல்லர் 5% ஏற்றத்திலும், லைட்காயின் 7.70% ஏற்றத்திலும், யுனிஸ்வாப்6.58% ஏற்றத்திலும், போல்கடேட் 6% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+