தங்கத்த விடுங்க.. 3 நாளில் பிட்காயின் கிட்டதட்ட $5000 ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்!

இன்றைய காலகட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம், பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளது என்றால் அது மறுபதற்கில்லை. ஏனெனில் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே புதிய உச்சம் தொட்டு வருகின்றது.

பிட்காயின் ஏற்றத்தினை பார்க்கும் போது விரைவில் தங்கத்திற்கு எதிராக வந்து விடும் போல் இருக்கிறது. ஏனெனில் கடந்த ஞாயிற்று கிழமையன்று 34,800 டாலர்களை தொட்ட பிட்காயின் விலையானது. இன்று சற்று குறைந்து 33,176 டாலர்களாக உள்ளன.

உலகின் பார்வையை ஈர்த்துள்ள பிட்காயின் மதிப்பானது கடந்த டிசம்பர் 16 அன்று தான் 20,000 டாலர்களை தாண்டியது. இதே கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 800 சதவீத ஏற்றமும் கண்டுள்ளது. பிட்காயினுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முதலீட்டாளர்கள், தங்கத்திற்கு பதிலாக பிட்காயினை பாதுகாப்பு புகலிடமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து புதிய உச்சம்

தொடர்ந்து புதிய உச்சம்

கடந்த 2020லேயே கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும், பிட்காயின் விலையானது, தங்கத்தினை ஒரங்கட்டி புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் தற்போது புத்தாண்டு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், மீண்டும் புதிய உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. சில நாடுகளில் கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் பிட்காயின் விலையானது கூடிக் கொண்டே போகிறது.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

முதலீட்டாளர்கள் ஆர்வம்

அதோடு கொரோனா காலத்திலும் பிட்காயின் விலையானது, எந்தவொரு முக்கிய காரணிகளாலும் பாதிக்கப்படவில்லை. இதனால் மிகபெரிய முதலீட்டாளர்கள் கூட பிட்காயினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருவதாக முந்தைய செய்தியில் படித்தோம்.

செம ஏற்றத்தில் பிட்காயின்

செம ஏற்றத்தில் பிட்காயின்

ஆக இப்படி ஒட்டுமொத்தமாக கிரிப்டோகரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி விலையும் பலமான ஏற்றம் கண்டு வருகின்றது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல, கடந்த சனிக்கிழமையன்று பிட்காயின் மதிப்பு 30,000
டாலர்களை முதல் முறையாக தொட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று கிட்டதட்ட 35,000 டாலர்களை நெருங்கியுள்ளது.

தங்கத்தினை பாதிக்கலாம்

தங்கத்தினை பாதிக்கலாம்

மத்தியில், பிட்காயின் விலையானது அபரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்த டிஜிட்டல் கரன்சியானது, கிட்டதட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் நிபுணர்கள் முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தனர். உண்மையில் பிட்காயின் விலையானது கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டதட்ட 5000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

தங்கம் Vs பிட்காயின்

தங்கம் Vs பிட்காயின்

முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தின் மத்தியில், பிட்காயின் விலையானது அபரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்த டிஜிட்டல் கரன்சியானது, கிட்டதட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் நிபுணர்கள் முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தனர். உண்மையில் பிட்காயின் விலையானது
கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டதட்ட 5000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+