உலகளவில் தற்போது பிட்காயின் முதலீடு என்பது முதலீட்டாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த நிலையில் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றது. குறிப்பாக இன்று வரலாற்றில் முதல் முறையாக 50,000 டாலர்களை கடந்ததுள்ளது. இது கடைசியாக 3.9% அதிகரித்து, 49,891 டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில் இது வரையில் சுமார் 72% ஏற்றம் கண்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளும் தற்போது கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் இன்னும் இதன் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எலாம் மஸ்க் முதலீடு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட எலான் மஸ்கின் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ததாக அறிவித்தது. இதே மாஸ்டர்கார்டு நிறுவனம், சில கிரிப்டோகரன்சிகளை தங்களது கார்டின் மூலமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பு
இப்படி சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தினை பிட்காயின் ஈர்த்துள்ளது என்றால் அது மறுபதற்கில்லை. ஏனெனில் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் இருந்தே உச்சம் தொட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் தொடர்ந்து பிட்காயினில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
எச்சரியாக இருக்க வேண்டும்
தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் பிட்காயின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் கிரிப்டோகரன்சிகள் அதிக ஏற்ற, இறக்கத்தினை கண்டு வருவதால், அதிக லாபத்தினை மட்டும் அல்ல, அதிக இழப்பினையும் ஏற்படுத்தக்கூடும். ஆக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
கொரோனா காலத்திலும் பிட்காயின் விலையானது, எந்தவொரு முக்கிய காரணிகளாலும் பாதிக்கப்படவில்லை. இதனால் மிகபெரிய முதலீட்டாளர்கள் கூட பிட்காயினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் இன்று வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு, $50,000 எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications