கிரிப்டோகரன்சி சந்தை மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பால் கடுமையான சரிவை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க டாலர் மதிப்பின் தொடர் உயர்வாலும், நேற்று அமெரிக்காவின் தொற்று நோய் பிரிவின் உயர் அதிகாரியான டாக்டர் அந்தோனி ஃபாசி ஒமிக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையும் சரி, கிரிப்டோகரன்சி சந்தையும் சரி சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாகத் தற்போது கிரிப்டோ முதலீட்டாளர்கள் உஷாராக முக்கியமான கிரிப்டோகரன்சியில் மட்டும் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.
கிரிப்டோ வர்த்தகச் சந்தை
இன்று கிரிப்டோ வர்த்தகச் சந்தை துவங்கியதில் இருந்து அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. சமீப காலமாகப் பெயர் தெரியாத பல கிரிப்டோகரன்சிகள் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்கள் திட்டமிட்டுப் பாதுகாப்பான கிரிப்டோவில் முதலீடு செய்து வருகின்றனர்.
லாபம்
மேலும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவில் கரெக்ஷன் செய்யக் கூடுதலான முதலீட்டை கிரிப்டோ சந்தையில் செய்தனர். இதனால் இன்று முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டை செய்து லாபத்தைப் பெற்று வருகின்றனர்.
தடை இல்லை
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மத்திய அரசும் நிதியமைச்சகமும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்தத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இதற்கிடையில் இந்தியாவில் முன்னணி வங்கிகள் தொடர்ந்து கிரிப்டோ முதலீட்டுக்கும், வர்த்தகத்தில் இருந்தும் விலகி இருக்கும் நிலையில், கோட்டாக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான WazirX உடன் புதிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
கிரிப்டோ முதலீட்டாளர்கள்
இந்த நடவடிக்கை இந்திய ரீடைல் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. நேற்றைய வர்த்தகத்தை ஒப்பிடுகையில் இன்று ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பு 5 சதவீதம் வரையில் உயர்ந்து 2.37 டிரில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோ சந்தையில் அதிக மதிப்புடைய கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு 8 சதவீதம் வரையில் உயர்ந்து 51,291.27 டாலரை எட்டியுள்ளது. 4ஆம் தேதி வர்த்தகத்தில் பிட்காயின் விலை கிட்டத்தட்ட 14,607.55 டாலர் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
4ஆம் தேதி வர்த்தகம்
4ஆம் தேதியன்று ஒரு பிட்காயின் விலை $57,482.17 டாலர் விலையில் இருந்து $42,874.62 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்திய முதலீட்டாளர்களும் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
பிட்காயின் மீண்டும் உயர்வு
இன்று பிட்காயின் மீண்டும் 51,000 டாலரை கடந்து பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் அதிகப்படியான நம்பிக்கை கொடுத்துள்ளது. இதேபோல் டிசம்பர் மாதத்திற்குப் பின் கிரிப்டோகரன்சி பெரிய அளவிலான வர்த்தக உயர்வை எதிர்கொள்ளும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய கிரிப்டோகரன்சி விலை
Bitcoin - 51,288.65 டாலர் - 6.34% உயர்வு
Ethereum - 4,413.22 டாலர் - 8.98% உயர்வு
Binance coin - 589.55 டாலர் - 5.68% உயர்வு
Tether - 1.00 டாலர் - 0.08% உயர்வு
Solana - 203.77 டாலர் - 10.63% உயர்வு
Cardano - 1.47 டாலர் - 11.71% உயர்வு
USD Coin - 1.00 டாலர் - 0.04% உயர்வு
XRP - 0.84 டாலர் - 7.70% உயர்வு
Polkadot - 29.08 டாலர் - 9.41% உயர்வு
Terra - 68.22 டாலர் - 6.50% உயர்வு
Dogecoin - 0.18 டாலர் - 9.49% உயர்வு
Avalanche - 96.46 டாலர் - 21.01% உயர்வு
SHIBA INU - 0.00 டாலர் - 12.42% உயர்வு
Polygon - 2.38 டாலர் - 30.17% உயர்வு
Crypto.com Coin - 0.65 டாலர் - 18.22% உயர்வு
Binance - 1.00 டாலர் - 0.15% சரிவு
Wrapped Bitcoin - 50,847.06 டாலர் - 6.15% உயர்வு
Algorand - 1.81 டாலர் - 4.75% உயர்வு
Litecoin - 160.84 டாலர் - 10.49% உயர்வு
Uniswap - 17.40 டாலர் - 10.06% உயர்வு
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications