கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் 2020ஆம் ஆண்டில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பார்த்து வியந்த பலருக்கு, கடந்த 2 நாட்களில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் #Thanskgiving, பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா கிரிப்டோகரன்சி குறித்த அப்டேட், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மீது தொடரும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாகக் கடந்த 2 நாட்களில் பிட்காயின் மதிப்பு சுமார் 3,000 டாலர் சரிந்துள்ளது.
இந்தச் சரிவு பெரிதாக இருந்தாலும், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் இது வரவேற்கப்படும் ஒன்றாக உள்ளது.
பிட்காயின் மதிப்பு
பிட்காயின் மதிப்பு 2017ஆம் ஆண்டு அடைந்த வரலாற்று உச்ச விலையான 19,783 டாலரை எட்டிப்பிடிக்கும் நோக்கத்தில் 2020ஆம் ஆண்டில் அதிரடி வளர்ச்சியை அடைந்தது. நவம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் பிட்காயின் 19,374 டாலர் வரையில் உயர்ந்தது.
119 நாள்
2020ஆம் ஆண்டில் சுமார் 119 நாள் பிட்காயின் மதிப்பு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து, மார்ச் 2020ல் இருந்து 293 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இதனால் அடுத்த சில நாட்களில் பிட்காயின் புதிய உச்சத்தை அடையும் என அனைத்துத் தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் திடீர் சரிவு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
3000 டாலர் சரிவு
நவம்பர் மாத துவக்கத்தில் 13,000 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் நவம்பர் 26ஆம் தேதி 19,374 டாலர் உயர்வை எட்டி அடுத்தச் சில மணிநேரத்தில் 16,490 டாலர் என்ற அதிகளவிலான சரிவை அடைந்தது.
இந்தச் சரிவிற்குப் பின் மீண்டும் வளர்ச்சி அடைய முயற்சி செய்து வரும் பிட்காயின் அதிகப்படியாக 17,426 டாலரை இந்த 2 நாட்களில் அடைந்துள்ளது.
நம்பிக்கை
2020ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக முதலீட்டு சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், மாற்று முதலீட்டுத் தளத்தைத் தேடிய முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோகரன்சி முக்கிய முதலீடாக மாறியது.
இதனால் பிட்காயின் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையாக மாறியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் குவியத் துவங்கியது.
சரிவு நல்லது
புதிய உச்சத்தை அடையும் தருவாயில் பிட்காயின் 3000 டாலர் வரையில் சரிந்துள்ளது, சந்தையில் இதன் வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகச் சந்தை நிறுவன முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர்.
அடுத்த சில வாரத்தில் பிட்காயின் முதலீட்டு சந்தை இன்னும் வலிமையான இடத்திற்குச் செல்லும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications