டிசம்பர் 31ஐ நெருங்கிவிட்டோம், இந்த ஆண்டில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிகம் லாபத்தை அள்ளிக்கொடுத்த சில முக்கியமான முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று.
2021ஆம் ஆண்டில் பிட்காயினுக்கு மட்டும் அல்லாமல் பல புதிய கிரிப்டோவிற்கும் வசந்த காலமாக மாறியுள்ளது. ஆனால் வருடம் முடியும் நேரத்தில் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயின் விலை
பிட்காயின் விலை 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் 26,279 டாலரில் துவங்கியது யாராலும் மறக்க முடியாத, பல தடைகளைத் தாண்டி, பல்வேறு டெக் தலைவர்கள், உலக நாடுகள் கொடுத்த அதரவின் மூலம் 2021 நவம்பர் 10ஆம் தேதி ஒரு பிட்காயின் மதிப்பு 68,790 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
33 சதவீதம் சரிவு
ஆனால் அடுத்த சில வாரத்திலேயே பிட்காயின் மதிப்பு சுமார் 33 சதவீதம் வரையில் சரிந்தது இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Santa Rally ஏமாற்றம்
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 52,000 டாலர் அளவில் பிட்காயின் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்களில் சுமார் 11 சதவீதம் சரிந்து 46,000 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. குறிப்பாகக் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலகட்டத்தில் Santa Rally இருக்கும் எனப் பெரும்பாலானோர் நம்பப்பட்ட நிலையில் இந்தச் சரிவு பெரிய அளவில் பாதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்குக் கிரிப்டோ முதலீட்டுச் சந்தைக்கு எவ்விதமான உதவியும் செய்யக் கூடாது எனப் போட்டு இருந்த தடையை நீக்கியதிலிருந்து கிரிப்டோ சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
மத்திய அரசு
இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தையும், முதலீட்டையும் தடை செய்யாது என உறுதி அளிக்கும் வகையில் புதிய கிரிப்டோ மசோதாவை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்து. ஆனால் வருடத்தின் இறுதியில் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்று டாப் 15 கிரிப்டோகரன்சியின் விலை நிலவரம்
Bitcoin - BTC விலை இன்றைய வர்த்தகத்தில் 47,372.62 டாலராக உள்ளது
Ethereum - ETH விலை இன்றைய வர்த்தகத்தில் 3,724.47 டாலராக உள்ளது
Binance Coin - BNB விலை இன்றைய வர்த்தகத்தில் 522.51 டாலராக உள்ளது
Tether - USDT விலை இன்றைய வர்த்தகத்தில் 1.00 டாலராக உள்ளது
Solana - SOL விலை இன்றைய வர்த்தகத்தில் 174.58 டாலராக உள்ளது
Cardano - ADA விலை இன்றைய வர்த்தகத்தில் 1.36 டாலராக உள்ளது
USD Coin - USDC விலை இன்றைய வர்த்தகத்தில் 1.00 டாலராக உள்ளது
XRP - XRP விலை இன்றைய வர்த்தகத்தில் 0.84 டாலராக உள்ளது
Terra - LUNA விலை இன்றைய வர்த்தகத்தில் 86.56 டாலராக உள்ளது
Polkadot - DOT விலை இன்றைய வர்த்தகத்தில் 27.85 டாலராக உள்ளது
Avalanche - AVAX விலை இன்றைய வர்த்தகத்தில் 104.16 டாலராக உள்ளது
Dogecoin - DOGE விலை இன்றைய வர்த்தகத்தில் 0.17 டாலராக உள்ளது
Shiba Inu - SHIB விலை இன்றைய வர்த்தகத்தில் 0.00 டாலராக உள்ளது
Polygon - MATIC விலை இன்றைய வர்த்தகத்தில் 2.54 டாலராக உள்ளது
Binance USD - BUSD விலை இன்றைய வர்த்தகத்தில் 1.00 டாலராக உள்ளது


Click it and Unblock the Notifications