ஆட்டம் கண்டது பிட்காயின்.. 50 மணிநேரத்தில் 10000 டாலர் சரிவு.. இதுதான் காரணம்..!

சர்வதேச முதலீட்டுச் சந்தையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் முக்கிய முதலீடாக மாறியுள்ள பிட்காயின் கடந்த 2 நாளில் 10,000 டாலர் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியது. இந்தத் திடீர் சரிவுக்கு என்ன காரணமெனத் தெரியாமல் பல குழப்பத்தில் மூழ்கியிருந்த நிலையில் தற்போது சரியான பதில் கிடைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியைக் கண்டு அஞ்சி ஓடிய மக்கள் 2020 கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதலீட்டுச் சந்தை சரிவில் முக்கிய முதலீடாக மாறியது. இதன் எதிரொலியாக எதிர்பாராத வளர்ச்சியைக் கண்ட பிட்காயின் தற்போது தடாலடியாக 10,000 டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிட்காயின் - புதிய உச்சம்

பிட்காயின் - புதிய உச்சம்

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 41,962.36 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் அடுத்த 50 மணிநேரம் மொத்த சந்தையும் தலைகீழாக மாறியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவில் பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக 2020 மார்ச் மாத சரிவிற்கு அடுத்தபடியாக 19 சதவீத சரிவை பிட்காயின் இந்த 50 மணிநேரத்தில் அடைந்துள்ளது.

பிட்காயின் மதிப்புச் சரிவு

பிட்காயின் மதிப்புச் சரிவு

பிட்காயின் மதிப்பு 41,962.36 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 30,300 டாலர் என்ற மோசமான நிலையில் வர்த்தகத்தைத் துவங்கி 2021ஆம் ஆண்டில் அடைந்த மொத்த வளர்ச்சியும் இழந்தது. இது பிட்காயின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

2021ல் அதிரடி வளர்ச்சி

2021ல் அதிரடி வளர்ச்சி

2021 ஜனவரி மாதம் முதல் 8 நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 29,000 டாலரில் இருந்து 41,000 டாலர் என்ற மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. இந்நிலையில் கடந்த 50 மணிநேரத்தில் 10,000 டாலர் சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்த மிகப்பெரிய சரிவிற்கு முக்கியக் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பும், அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வை முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றும் மற்றும் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் தொகை ஆகியவற்றின் வாயிலாக ஏற்பட்ட நிதிச் சுமையின் வாயிலாக டாலர் மதிப்பு பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது. இந்தச் சரிவில் இருந்து தற்போது டாலர் மதிப்பு மீண்டு வரும் காரணத்தால் பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது.

 

செப்டம்பரில் இதே பிரச்சனை..!

செப்டம்பரில் இதே பிரச்சனை..!

இதேபோல் செப்டம்பர் மாதம் டாலர் மதிப்பு குறியீடு 91ல் இருந்து 94ஆக உயர்ந்த போது பிட்காயின் மதிப்பு 12,000 டாலரில் இருந்து 10000 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

திங்கட்கிழமை வர்த்தகத்தில் 30,300 டாலர் என்ற மோசமான நிலையில் பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் கணிசமான உயர்வைச் சந்தித்து 36,621 டாலர் வரையில் உயர்ந்தது.

பெரும் சரிவில் இருந்து பிட்காயின் மிகவும் குறுகிய காலகட்டத்தில் உயர்ந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+